திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.. போற போக்கில் உதயநிதியை சீண்டிய செல்லூர் ராஜூ..!

By vinoth kumar  |  First Published Dec 12, 2022, 7:30 AM IST

திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொற்றி கொண்டு வருகிறார். 


திமுக அமைச்சர்கள் கலெக்க்ஷன், கரெப்ஷன் என உள்ளனர். அவர்களின் ஊழலை மறைக்க அதிமுக மீது  குற்றம்சாட்டுகின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செல்லூர் ராஜூ;- திராவிட மாடல் முதல்வர், சென்னை மேயரை காரில் தொங்கி கொண்டு ஏற விட்டுள்ளார். கொடுமையிலும் கொடுமை பெருங்கொடுமை மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஓடி வந்து காரில் தொங்கி கொண்டு வருகிறார். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். 

Latest Videos

இதையும் படிங்க;- முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பவும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவு போட்டால் அவ்வளவுதான். மக்கள் வெறுத்துப்போயுள்ளனர். அதிமுக ஒன்றுபட்ட இயக்கம். அதிமுகவில் இருந்து ஒரு சிலர் போயிருக்கலாம். அதைப்பற்றி பொருட்படுத்தவில்லை. தேர்தலை நோக்கி அதிமுக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தவில்லை. தேர்தல் வரும் போகும், நாங்கள் மக்கள் நலனுக்காகதான் போராடி வருகிறோம் என்றார். 

திமுக ஒரு கம்பெனி தான். குடும்பம் தான் கழகம். குடும்பத்தினர் தான் தலைவர். திமுக அமைச்சரவையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகபோகிறார் என்ற தகவல், பெரிய விசயம் இல்லை. தற்போதே, தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், அவரது தாய், மருமகன் செயல்படுகின்றனர். திமுக அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு அதிமுகவினர் யாரும் பொருட்படுத்த மாட்டோம். அதிமுகவின் நோக்கம் தெளிவானது. எங்களின்  எண்ணம் உயர்வானது. திமுக மக்களுக்கு விடியலை தருவோம் என கூறி தற்போது விடியாத அரசாக உள்ளது என செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை.. கோவையில் திமுக ஒட்டிய பரபரப்பு போஸ்டர் !

click me!