சென்னை காசிமேடு பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வை முடித்துவிட்டு திரும்பும் போது முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் தொங்கிய படி சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பேசுப்பொருளாக உருவாகியுள்ளது.
காசிமேட்டில் புயல் நிலவரங்களை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவாகி மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனையடுத்து, மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வை மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு சென்ற முதலமைச்சர், சேதம் அடைந்த படகுகளை பார்வையிட்டார். மேலும் மீனவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அவருடன் நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க;- புயலையே சந்திக்கிற ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.!நான் சாதாரண ஸ்டாலின் இல்லை.! முதலமைச்சர் அதிரடி
இந்நிலையில், சென்னை காசிமேடு பகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வை முடித்துவிட்டு திரும்பும் போது முதல்வரின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் தொங்கிய படி சென்ற வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பேசுப்பொருளாக உருவாகியுள்ளது. இதனை பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- காசிமேட்டில் புயல் நிலவரங்களை பார்வையிட சென்ற முதல்வரின் வாகனத்தின் பின்னால் சென்ற வாகனத்தில் தொங்கியபடி சென்னை மாநகர மேயரும், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அவர்களும் சென்ற காட்சி அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு அரசியல்வாதியாக மேயர் பிரியா வாகனத்தில் தொங்கி கொண்டு சென்றதை கூட நம்மால் கடந்து சென்று விட முடியும். ஆனால் மிக மூத்த இந்திய ஆட்சி பணி அதிகாரி (IAS) ஒருவர் வாகனத்தில் தொங்கியபடி சென்றுள்ளது அவரின் அந்தஸ்துக்கு, பணியின் கௌரவத்திற்கு உகந்ததல்ல. என்றே நான் கருதுகிறேன். முதலமைச்சரின் வாகனத்திலோ, தன் வாகனத்திலோ அவர் சென்றிருக்க வேண்டும். முதலமைச்சருக்கு தெரிந்து இந்த நிகழ்வு நடந்திருக்குமானால் துரதிர்ஷ்டவசமானது. தெரியாமல் நடந்திருந்தால் முதலமைச்சர் கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- திராவிட மாடல் என்பது தமிழே கிடையாதா? தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுவது என்ன?