திராவிட மாடல் என்பது தமிழே கிடையாதா? தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுவது என்ன?

By Narendran SFirst Published Dec 11, 2022, 8:23 PM IST
Highlights

திராவிட மாடல் என்ற பெயருக்கு பதிலாக தமிழில் ஒரு நல்ல பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 

திராவிட மாடல் என்ற பெயருக்கு பதிலாக தமிழில் ஒரு நல்ல பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாண்டிச்சேரியில் புயல் வருகிறது என தெரிவித்த உடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் மூலம் பெரிய அளவில் இழப்புகள் ஏற்படவில்லை. பல இடங்களில் வாகனங்கள் பாதிக்கப்பட்டன. இருந்தபோதிலும் புயலால் ஏற்பட்டுள்ள தொடர்பாக கணக்கிடும் பணி என்பது நடைபெற்று வருகிறது. புதுவையில் மாண்டஸ் புயலினால் எந்த பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பாதிப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. ஜி 20 மாநாட்டில் உலகத்தின் பொருளாதாரம், சுகாதாரம், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்டவைகள் தான் நமது முக்கியமான கோரிக்கையாகும்.

இதையும் படிங்க: நாளை குஜராத் முதல்வர் பதவி ஏற்பு விழா... விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் குஜராத் புறப்படுவதாக தகவல்!!

சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்கும் போது தான் பூமி வெப்பமயமாகும் போது தான் நாம் நினைக்கின்ற அளவைவிட அது வெப்பமாக இருக்கட்டும் மழையாக இருக்கட்டும் அதிகமாகிவிடும். இயற்கையை நாம் பாதுகாக்கும் பொழுது இயற்கை நம்மை பாதுகாக்கும். புதுவையில் பிளாஸ்டிக் ஒழிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டிற்கு இந்திய தலைமை தாங்குவது மிக பெருமை கொள்ள வேண்டியது. ஜி 20 மாநட்டை இந்திய நடத்துவது நாம் எல்லோரும் கொண்டாடப்பட வேண்டியது. ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து புதுவையில் ஆக்கப்பூர்வமாக தான் செயல்ப்படுகிறோம். அரசுக்கு துணையாக தான் துணை நிலை ஆளுநர் செயல்பட்டு வருகிறேன்.

இதையும் படிங்க: முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

அரசுடன் பிணக்கு இல்லை இணக்கமாக தான் செயல்ப்பட்டு வருகிறோம். திராவிட மாடல் என்ற பெயர் பதிலாக தமிழில் ஒரு நல்ல பெயரை கண்டுபிடிக்க வேண்டும். குறிப்பாக மாடல் என்பது ஆங்கில வார்த்தை அதை மாற்றி நல்ல தமிழ் பெயரை வைக்க கருணாநிதியின் மகனுக்கு கோரிக்கை வைக்கிறேன். தான் அரசியல்வாதியாக இல்லை ஆளுநராக தான் செயல்பட்டு வருகிறேன். அனைத்து தரப்பிடமும் ஆலோசித்து மனகுல விநாயகர் கோவிலுக்கு யானை வாங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். யானை லட்சுமியின் நினைவுகள் தன் மனதில் இருந்து இன்னும் நீக்கவில்லை. தமிழக ஆளுநரின் செயல்ப்பாடு குறித்து மற்றொரு ஆளுநராக கருத்து தெரிவிக்க கூடாது என்று தெரிவித்தார். 

click me!