முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

By Raghupati R  |  First Published Dec 11, 2022, 7:04 PM IST

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்ற பேச்சு எழுந்து வருகிறது.


ஆனால் திமுக மீது மீண்டும் வாரிசு அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் மறுத்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.  இருப்பினும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் வரை தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

ஆனால், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தற்போது சட்டமன்ற பணிகளில்  பிசியாக இருக்கிறார். அதேபோல் சினிமாவிலும் தீவிரமாக நடிப்பு, தயாரிப்பு, ரிலீஸ் ஆகிய பணிகளை செய்து வருகிறார்.ரெட் ஜெயண்ட் நிறுவனம் தீவிரமாக பல்வேறு படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி மாமன்னன், கண்ணை நம்பாதே போன்ற படங்களிலும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அல்லது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஏதாவது ஒன்று வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் டிசம்பர் 14 முதல் 16ஆம் தேதிக்குள் உதயநிதி அமைச்சராவது உறுதி என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க.. பால் விற்பனையாளர் முதல்வரானது எப்படி ? இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர்.. யார் இந்த சுக்விந்தர் சிங் சுகு ?

இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மாண்டஸ் புயலால் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பெரிய பாதிப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்தது அதனையும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் உடனே சரி செய்து விட்டார்கள்.புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டுகிறார்கள்’ என்று கூறினார்.

விரைவில் நீங்கள் அமைச்சர் ஆவீர்கள் என்று செய்தி வருகிறது. எப்போது அமைச்சர் ஆவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பதவி குறித்து நான் முடிவு எடுக்க முடியாது. முதல்வர் தான் அதில் முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதையும் படிங்க.. தொடரும் தமிழக காவல்துறையின் அடக்குமுறை.. போராட்டத்தில் குதித்த பாஜக - அண்ணாமலை அறிவிப்பு !

click me!