மாண்டஸ் புயலால் சாதரண காற்று,மழை தான் ! மக்களை காப்பாற்றியது போல் பில்டப் செய்யும் ஸ்டாலின்.? இபிஎஸ் ஆவேசம்

By Ajmal Khan  |  First Published Dec 12, 2022, 7:56 AM IST

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் பக்கபலமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் 40க்கு 40 வெற்றி பெற அணைவரும் உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 


உதயநிதிக்கு பட்டாபிஷேகம்

பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைக்கும் விழா திருப்பூரில் நடைபெற்றது. அப்போது அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும்  ஜெயலலிதாவும் அதிமுக தொண்டர்களை தான் பிள்ளைகளாக கருதி கட்டி காத்து வளர்த்ததாக தெரிவித்தார்.  திமுகவை பொறுத்தவரைக்கும் அது ஒரு குடும்பக் கட்சி கார்ப்பரேட் கம்பெனி யார் வேண்டுமென்றாலும் இடம் பெறலாம். அதிமுகவில் இருந்து எட்டு பேர் திமுகவிற்கு சென்று அங்கு டைரக்டர் ஆகி தற்போது அமைச்சராகி விட்டனர்.

Latest Videos

திமுகவில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை.  அது ஒரு குடும்பக் கட்சி குடும்ப ஆதிக்கம். உதயநிதிக்கு பட்டாபிஷேகம் செய்ய ஸ்டாலின் தயாராக உள்ளார். உதயநிதி படத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்துக் கொண்டுள்ளார். படத்தில் நடித்தால் தான் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முடியும் திமுகவினரை பொறுத்த வரைக்கும் விஞ்ஞான மூளை படித்தவர்கள். திமுக ஆட்சியில் கொள்ள அடிக்கிற பணத்தை வெள்ளையாக்குவதற்காக திரைப்படத்தில் உதயநிதி நடித்திக் கொண்டிருக்கிறார். 

முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !

மூத்த அமைச்சர்களுக்கு டம்மி பதவி

தமிழகத்தில் தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸிடம் படத்தை கொடுத்தால் தான் திரையிடப்படும். திரைத்துறையிலும் கமிஷன் வாங்கும் வரை கட்சி திமுக தான். திரை உலகம் நசுங்கிக் கொண்டுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும் கொள்ளை அடிப்பதற்காக கட்சி நடத்துபவர் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். ஜவஹர்லால் நேரு பிரதமர், அவரது மகள் இந்திரா காந்தி பிரதமர், அவருடைய மகன் ராஜீவ் காந்தி பிரதமர் இதனை அப்போது திமுக தலைவராக முதலமைச்சராக இருந்த கருணாநிதி கடுமையாக விமர்சித்தார்.  ஆனால் தற்போது கருணாநிதி முதலமைச்சர், ஸ்டாலின் முதலமைச்சர், எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் என கூறிய வருகின்றனர். திமுகவை பொறுத்தவரைக்கும் குடும்ப கட்சி, அந்த கட்சிக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அப்படியே பதவி கொடுத்தாலும் மூத்த அமைச்சர்களுக்கு டம்மி பதவி தான் கொடுக்கப்பட்டுள்ளது அதிமுகவில் இருந்து விலகி வெளியேறிய வெளியேற்றியவர்களுக்குத்தான் முக்கிய பொறுப்புகள் அங்கு வழங்கப்பட்டுள்ளது. 

மேயர் பிரியா வாகனத்தில் தொங்கியதை கூட விட்டுடலாம்.. ஆனால்.. ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் பாஜக..!

அதிமுக திட்டங்களுக்கு மூடு விழா

தொண்டனை மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. உழைப்பவருக்கு விசுவாசமாக இருப்பவருக்கு வீடு தேடி கதவைத் தட்டி பதவிகள் கொடுக்கப்படுகிறது. திமுக ஆட்சி வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டது.  இந்த 20 மாதத்தில் நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்தினார்கள். அதிமுக ஆட்சி கால திட்டங்களை முடக்கியது தான் திமுக அரசின் சாதனை. திமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் தற்போது கொடுத்த உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல ஏழை மக்கள் வீட்டின் அருகிலேயே மினிட் கிளினிக் தொடங்கப்பட்டது. அதற்கு முடிவிழா  திமுக ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.
அதிமுக கட்சி பேரிடர் ஆட்சி என ஸ்டாலின் விமர்சிக்கிறார். நான் முதலமைச்சராக பதவி ஏற்ற  போது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. சென்னைக்கு ரயிலில் தான் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.  வறட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கியது அதிமுக ஆட்சி என தெரிவித்தார். 

பில்டப் செய்யும் ஸ்டாலின்

கஜா என்கின்ற மிகப்பெரிய புயல் உருவானது இந்த புயலில் இருந்து மக்களை படிப்படியாக மீட்டதும்  அதிமுக அரசுதான் என கூறினார். இதனையடுத்து கொரோனா என்கிற மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மக்களே காப்பாற்றினோம். பேரிடர் காலத்தை சரியான முறையில் கையாண்டு அதனை சாதித்த அரசாங்கம் அதிமுக அரசு என  தெரிவித்தார். இந்த முறை புயலுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? புயல் கரைக்கு வர வர நீர்த்துப் போய்விட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் பல புயல்களை சந்தித்தோம். பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அடிச்சுவடி இல்லாமல் சரி செய்துள்ளோம்.

தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே புயல் கரையே கடந்தது. அப்போது 11 சென்டிமீட்டர் மழை பெய்தது இது சாதாரணமாக பெய்யக்கூடிய மழை, சென்னையில் சுற்றுவட்டார பகுதியில் 6 சென்டிமீட்டர் முதல் 9 சென்டிமீட்டர் தான் மழை பெய்தது இதுவும் எப்பொழுதும் பெய்கின்ற மழைதான். எனவே இயல்பாகவே  தண்ணீர் வடிந்து விடும் எனவே இந்த புயலால் பெரிய அளவு சேதம் எதுவும் இல்லை. ஆனால் ஸ்டாலின் பில்டப் பண்ணி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது போலவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியது போலவும் பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். 

இதையும் படியுங்கள்

திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை.. போற போக்கில் உதயநிதியை சீண்டிய செல்லூர் ராஜூ..!

click me!