நீட் தேர்வில் விலக்கு தேவை.. அமித்ஷா முன்னிலையில் கெத்தாக திராவிடத்தை பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின்.!

By vinoth kumarFirst Published Sep 3, 2022, 1:12 PM IST
Highlights

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை.

மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களும், அந்தமான் நிக்கோபர் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;-  மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை வழங்கும் காலத்தை மத்திய அரசு மேலும் நீட்டிக்க வேண்டும்.  ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் அதிவேக ரயில் வழித்தடத்தை உருவாக்க வேண்டும். 

இதையும் படிங்க;- திமுகவின் மா.செவாகும் அதிமுக மாஜி அமைச்சர்.. 4 மாவட்ட செயலாளருக்கு ஆப்பு.. ஸ்டாலின் கையில் புதிய லிஸ்ட் ..


தென் மாநில மொழிகள் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து யாதும் ஊரே யாவரும் கேளில் என்ற பாதையில் பயணிப்போம். மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளுக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கொள்முதல் செய்ய தமிழகம் தயாராக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- சரக்கை விற்கும் பணத்தில் உரிமைத்தொகை..! குடும்ப தலைவனை இழந்து குடும்ப தலைவிக்கு ரூ.1000 தேவையா..?- பாஜக

click me!