
சனாதன தர்மத்தில் குறிப்பிட்டுள்ள கடவுள்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்து விட்டார்களா என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் விளக்கம் கேட்டு சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அனுப்பி உள்ளார்.
மேலும், நீங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினரா? என்றும் தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சியில் பேச உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எழுப்பியுள்ள கேள்விகள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சை மேல் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், செல்லுமிடமெல்லாம் தமிழக பண்பாடு, கலாச்சாரம் குறித்து பேசுவது மட்டுமல்லாமல் திருக்குறளையும் திருவள்ளுவர் குறித்தும் கருத்து தெரிவிப்பது மற்றும் சனாதன தர்மத்தின் தோற்றம், கொள்கை மற்றும் ஹிந்து மதம் குறித்து பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவரின் ஒவ்வொரு கருத்தும் சர்ச்சையாக மாறி வருகிறது.
நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்ளை குறித்து மேடைதோறும் பேசி வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. பல்கலை கழக துணைவேந்தர்கள் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டது, அதைத் தொடர்ந்து மாநில அரசே இனி பல்கலை கழக துணை வேந்தர்களை நியமிக்கும் தீர்மானம் கொண்டு வந்திருப்பது, என தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையிலேயே அவரின் நடவடிக்கைகள் இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: "ஒம் காளி.. ஜெய் காளி.. இந்துக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் ".. ஜாமினில் வந்தவுடன் வேலையை காட்டிய கனல் கண்ணன்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் நடந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர், திருக்குறள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் திருக்குறளில் முதல் குறளில் ஆதிபகவன் என்று திருவள்ளுவர் எழுதியிருக்கிறார்
ஆதிபகவன் தான் இந்த உலகத்தை படைத்தார் அதைத்தான் அவர் கூறுகிறார், ஆனால் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி.யு போப், திருக்குறளில் உள்ள ஆன்மிக சிந்தனைகள் நீக்கிவிட்டார், மிஷனரியாக இந்தியாவுக்கு வருகை தந்திருந்த அவரது திருக்குறளின் மொழிபெயர்ப்பு ஆன்மிகம் இல்லாத சவம் போன்றது என பேசினார்.
அவரின் இந்த பேச்சுக்கு தமிழகத்தில் கண்டனம் எழுந்துள்ளது, பலரும் ஆளுநரின் இந்த பேச்சு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். திருக்குறல் குறித்து தமிழர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: திமுகவின் மா.செவாகும் அதிமுக மாஜி அமைச்சர்.. 4 மாவட்ட செயலாளருக்கு ஆப்பு.. ஸ்டாலின் கையில் புதிய லிஸ்ட் ..
இந்நிலையில்தான் சனாதன தர்மம், தோற்றம், கொள்கை, இந்துதர்மத்தின் அர்த்தம் பெரியாரின் கொள்கைகள் குறித்து ஆளுநர் ஆர்.என் ரவியிடம் விளக்கம் கேட்டு சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி மனு ஒன்றை அனுப்பியுள்ளார். தமிழக ஆளுநர் தொடர்ந்து பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மத்தின் சிறப்புகளை விவரித்து வரும் நிலையில், சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி அவர் இந்த மனுவை அனுப்பி உள்ளார்.
சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசுபவராக ஆளுநர் இருப்பதால் இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க அவர் சரியான நபர் அவர்தான் என கூறி அவரிடம் 19 கேள்விகளை வழக்கறிஞர் துரைசாமி முன்வைத்துள்ளார். அதில் சில முக்கியமான கேள்விகள் பின்வருமாறு:- சனாதன தர்மத்தின் கொள்கை என்ன, இந்து என்பது யார்? ஏதாவது பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா? 1964ல் லக்னோவில் வெளியிடப்பட்ட பெர்சிய மொழி அகராதியில் இந்து என்றால் திருடன், அடிமை, வழிப்பறி என விளக்கம் கூறப்பட்டுள்ளது இது சரியா?
சனாதன தர்மத்தில் குறிப்பிட்டுள்ள கடவுள்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? அல்லது வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்து விட்டார்களா? உயிருடன் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எங்கு வசிக்கிறார்கள்? அவர்களுடைய அன்றாட பணிகள் என்ன? அவர்களுக்கு யார் உடைகளை தைத்து கொடுக்கிறார்கள்? உடைகள் நகைகளை அவர்கள் எங்கே வாங்குகிறார்கள்? இப்படி பல திகைக்க வைக்கும் கேள்விகளை ஆளுநருக்கு அவர் முன்வைத்துள்ளார்.