புதுப்பிக்கப்பட்ட திமுக இணையதளத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

By vinoth kumar  |  First Published Jun 10, 2023, 11:01 AM IST

தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் அன்றாட நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழகத்தில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளதா.? முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு தகவல்

இதற்காக, தனித் தனியே இணையதள பக்கங்கள், முகநுால், டுவிட்டர் என அனைத்திலும் கணக்குகளை துவங்கி, அதில், தங்களின் கட்சி தொடர்பான நிகழ்வுகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுகவுக்காக தொடங்கப்பட்ட dmk.in என்ற இணையதள பக்கம் திடீரென முடங்கியுள்ளது. இணையதளம் புதுப்பிக்கப்பட்டு வருவதால் முடக்கப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டது. 

இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், நமது சாதனைகள் என இன்னும் பல தகவற்புதையல்கள் நிறைந்த, புதுப்பொலிவூட்டப்பட்ட https://t.co/AtLU4rIIQU கழக வலைத்தளத்தைக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று தொடங்கி வைத்தேன்.

கையெழுத்துப் பிரதி இதழ்கள் முதல் கணினி வரை கழகம் கடந்த வந்த நீண்ட… pic.twitter.com/LRKRZqbMUG

— M.K.Stalin (@mkstalin)

 

இந்நிலையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் கருணாதியின் நூற்றாண்டை முன்னிட்டு, வண்ணமிகு வடிவில், புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இதில், இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், சாதனை ஆகியவை இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க;- இபிஎஸ் கோட்டையில் புகுந்து கெத்து காட்டிய திமுக.. அதிர்ச்சியில் அதிமுக..!

 

click me!