ரூ.30,000 கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கும் ஸ்டாலின் குடும்பம்! இபிஎஸ் விளாசல்!

By vinoth kumarFirst Published Jun 10, 2023, 8:23 AM IST
Highlights

தமிழகத்தில் கொலை, கொள்ளை போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என விமர்சனம் செய்துள்ளார். 

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்று விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர்;- விடியா திமுக ஆட்சியின் அக்கிரமங்கள், அடாவடிகள் நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.  திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வாக்களித்த மக்கள் வேதனையில் உள்ளனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என விமர்சனம் செய்துள்ளார். 

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் குப்பைக்கு கூட வரி போடுகிறது திமுக அரசு. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மிக்சி, மின்விசிறி கொடுத்த அதிமுக அரசு.  அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், பாலத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது திமுக அரசு. ரூ.30,000 கோடியை வைத்துக் கொண்டு என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறது ஸ்டாலின் குடும்பம். 

தமிழகத்தில் 5,800 டாஸ்மாக் பார்களில் சுமார் 4000 டாஸ்மாக் பார்கள் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் அனுமதியில்லாத மதுபான பார்கள் மூலம் ரூ.20,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் காவல்துறையினரே குற்றத்தில் ஈடுபடுகின்றனர். காவல்துறையை நிர்வாகம் செய்பவர்கள் சரியில்லை. அதிமுக ஆட்சியில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அவற்றை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

click me!