முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புகிறார்.. எகிறும் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published Nov 13, 2021, 2:58 PM IST
Highlights

அதிமுக ஆட்சியில் பருவமழை தொடங்கும் முன்பே அதிகாரிகளை நியமித்து பணிகள் தொடங்கினோம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக அரசு மருத்துவ முகாம்களை நடத்தவில்லை. எந்த பகுதியிலும் இதுவரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக அரசு மழைநீர் வடிகால் திட்டங்களை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பருவமழையின் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் பல பகுதிகளை நேரில் சென்று ஆய்வு, செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, பூந்தமல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி;- திமுக அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே சென்னை நகரில் மழை பாதிப்புக்கு காரணம். சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழை பெய்து 8 நாட்கள் ஆகியும் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. 

அதிமுக ஆட்சியில் பருவமழை தொடங்கும் முன்பே அதிகாரிகளை நியமித்து பணிகள் தொடங்கினோம். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக அரசு மருத்துவ முகாம்களை நடத்தவில்லை. எந்த பகுதியிலும் இதுவரை மருத்துவ முகாம்கள் நடத்தப்படவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

முதல்வர் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார். திமுக அரசு மழைநீர் வடிகால் திட்டங்களை முறையாக பராமரிக்கவில்லை. அதிமுக ஆட்சியில்  பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்டங்களை செயல்படுத்தியது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மூடப்பட்ட 600 சிறு குறு நிறுவனங்களை திமுக அரசு மீண்டும் திறக்கவில்லை.

பாதிக்கப்பட விசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திமுக அரசு வேகமாக செயல்பட வேண்டும் என்பதே அதிமுகவின் எண்ணம். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திறமை இல்லாத அரசு என கடுமையாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். 

click me!