ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் அவர்களே கீழ்த்தரமான செயலில் ஈடுபடலா.. எரிமலை வெடிக்கும் ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published Nov 13, 2021, 2:23 PM IST
Highlights

மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில்  உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில்  உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

கோவை கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரனின் மூத்த மகள் பொன்தாரணி (17). ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

ஆனால், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் மிதுன் சக்கரவர்த்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர். வேறு பள்ளி மாறினாலும் அவர் தொடர்ந்து பாலியல் ரீதியான டார்ச்சரை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மனஉளைச்சலில் இருந்து வந்த பொன் தாரணி பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, அவரை அறையை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்கொலை காரணமாக இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்து உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்!(2/3)

— Dr S RAMADOSS (@drramadoss)

ஆசிரியர்கள் தெய்வத்தை விட மேலானவர்கள் என்று நமது முன்னோர் கூறியுள்ளனர். தாய், தந்தைக்குப் பிறகு மாணவர்களை காக்க வேண்டிய ஆசிரியர் ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர்.

மாணவி தற்கொலை தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது போதுமானதல்ல. அவரின் பாலியல் குற்றங்களை தடுக்காமலும், உடந்தையாகவும் இருந்த பள்ளி நிர்வாகத்தில்  உள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

click me!