இதுவரை எந்த முதலமைச்சரும் செய்திடாத காரியம்… பாராட்டு மழையில் நனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

By manimegalai a  |  First Published Sep 30, 2021, 8:35 PM IST

மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு..ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.


மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தருமபுரி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேறுகால அவசர சிகிச்சை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டீற்கு திறந்து வைத்தார். இதையடுத்து, வத்தல்மலை மலை கிராமத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு ரூ.14.47 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

Tap to resize

Latest Videos

இதையடுத்து வத்தல்மலை பொதுமக்கள், விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது, தங்கள் பகுதிக்கு இதுவரை எந்த முதலமைச்சரும் வந்ததில்லை என்று கூறிய பொதுமக்கள், ஸ்டாலின் வருகை தங்களை மகிழ்வடைய செய்வதாக கூறினர். மேலும், மிளகு, காப்பி, மா, பலா, உள்ளிட்ட உற்பத்தி பொருள்களுக்கு சந்தையில் நேரடியாக விற்க நடவடிக்கை எடுக்க பழங்குடியின விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகளை அளித்தது. அதில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மீதமுள்ள வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவோம். அனைத்து தரப்பினரின் கோரிக்கையும் திமுக அரசு நிறைவேற்றும். பழங்குடியின மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம். மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என்றும் உறுதியளித்தார்.

click me!