எம்.ஜி.ஆர். துரோகியா....! சாத்தான் வேதம் ஓதக்கூடாது என துரைமுருகனுக்கு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கண்டனம்...!

Published : Sep 30, 2021, 06:42 PM IST
எம்.ஜி.ஆர். துரோகியா....! சாத்தான் வேதம் ஓதக்கூடாது என துரைமுருகனுக்கு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கண்டனம்...!

சுருக்கம்

துரைமுருகனின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோகம் கத்தியை போன்றது, அடுத்தவரை குத்தும் போது சுகமாக இருக்கும்

துரைமுருகனின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துரோகம் கத்தியை போன்றது, அடுத்தவரை குத்தும் போது சுகமாக இருக்கும். நம்மை திருப்பிக் குத்தும்போது கொடூரமாக இருக்கும் என்பதை துரைமுருகன் உணர்ந்து செயல்பட வேண்டும்.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தங்கள் இயக்கம் பல துரோகிகளை கடந்து வெற்றி கண்டது என்று கூறியிருந்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரையும் துரோகிகள் பட்டியலில் வரிசைப்படுத்தியிருந்தார் துரைமுருகன்.

இந்தநிலையில் துரைமுருகன் பேச்சுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் பேரன்பை பெற்றவர் எம்.ஜி.ஆர். தமக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தபோது, கருணாநிதியை முதலமைச்சர் ஆக்கியவர் எம்.ஜி.ஆர். என்று கூறியுள்ளனர்.

எம்.ஜி.ஆரை. கட்சியை விட்டு நீக்கியது, கச்சத்தீவை தாரை வார்த்தது. ஜல்லிக்கட்டு தடை, நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்பட்டது என கருணாநிதிதான் துரோகங்களை செய்தவர் கருணாநிதி என்றும், அவர் மறைவிற்கு பின்னர் அந்த பணியை துரைமுருகன் செய்துவருவதாகவும் கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துரோகம் கத்தியை போன்றது, அடுத்தவரை குத்தும் போது சுகமாக இருக்கும். நம்மை திருப்பிக் குத்தும்போது கொடூரமாக இருக்கும் என்பதை துரைமுருகன் உணர்ந்து செயல்பட வேண்டும். என்றும் பன்னீர்செல்வம், பழனிசாமி கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

களமிறக்கப்படும் 50000 பெண்கள்... திமுகவின் சீக்ரெட் வேட்டை... கண்ணுக்கு தெரியாமல் மெகா சர்ப்ரைஸ்..!
விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?