கட்சித் தலைமையையே விமர்சிக்கிறீங்களா..? முத்த தலைவரின் வீடு, காரை அடித்து துவம்சம் செய்த தொண்டர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Sep 30, 2021, 6:19 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சியை தற்போதிருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக ஒரு தலைவர் தேவை. 

’கட்சியில் இருந்து எல்லாவற்றையும் பெற்றவர்கள் கட்சியை அழிக்க நினைக்கக் கூடாது. எங்களில் சிலர் கட்சியைக் உருவாக்குவதில் பங்களித்தவர்கள். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், இந்தியாவை காப்பாற்றுவதற்கான தேசியப் போராட்டத்தில் கட்சி திறம்படச் செயல்படவும் தொடர்ந்து விரும்புகிறோம். நாங்கள் ஆக்கபூர்வமான மாற்றத்தின் முகவர்கள். காங்கிரஸ் கட்சியை தற்போதிருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக ஒரு தலைவர் தேவை. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் கட்சியை எப்படி வலுப்படுத்த முடியும் என்று சிந்திக்க வேண்டும்’’என அவர் வலியுறுத்தி இருந்தார். 

இப்படி காங்கிரஸ் மேலிடத்தை விமர்சித்த காரணத்தால் நேற்றிரவு கபில் சிபல் வீடு, கார் உள்ளிட்டவை அக்கட்சி இளைஞரணியினரால் தாக்கப்பட்டது. 
முழு நேர தலைமை இல்லாத காங்கிரஸ் கட்சி கடந்த 2 ஆண்டுகளாக தடுமாறி கிடக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த சொற்ப மாநிலங்களில் சிலவும் ஏற்கனவே கை நழுவிப் போய்விட்ட நிலையில், பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களிலும் கடும் குழப்பம் நிலவுகிறது. கோவாவில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விட்டது. நூற்றாண்டு பாரம்பரியமிக்க கட்சி இப்படி கரைவதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்தத் தலைவர்கள் அவ்வப்போது தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்கின்றனர். 

இந்நிலையில், காங்கிரஸ் தலைமையை கபில் சிபல் வெளிப்படையாக விமர்சித்தார்.  “கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள். முரண் என்னவென்றால் யாருடன் அவர்கள் நெருக்கம் காட்ட விரும்பவில்லையோ அவர்கள் தான் இன்னனும் உடன் நிற்கிறார்கள். காங்கிரஸில் சீர்திருத்தங்களுக்காக ஜி-23 போராடும். பின் வாங்காது.” எனத் தெரிவித்தார். இதற்காக அவர் வீடு மீது சொந்தக் கட்சியினரே தாக்குதல் நடத்தினர். அவரது காரை சேதப்படுத்தினர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் காங்., எம்.பி., ஆனந்த் சர்மா.

இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், “கபில் சிபலின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அதிர்ச்சியும், அருவருப்பும் ஏற்பட்டது. இந்த மோசமான செயல் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இதனை கடுமையாக கண்டிக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய வரலாறு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. கருத்து வேறுபாடுகள் ஒரு ஜனநாயகத்தின் ஒரு பகுதி. தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைவர் சோனியாவை வலியுறுத்துகிறேன்.” எனக் கூறியுள்ளார்.

click me!