M.K. Stalin: ராத்திரி நேரம்.. ரோட்டில் இறங்கி முதல்வர் ஸ்டாலின் செய்த விஷயம்...! பரபர வீடியோ

Published : Jan 14, 2022, 08:54 AM IST
M.K. Stalin: ராத்திரி நேரம்.. ரோட்டில் இறங்கி முதல்வர் ஸ்டாலின் செய்த விஷயம்...! பரபர வீடியோ

சுருக்கம்

சென்னையில் ராத்திரி நேரம் ரோட்டில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின், சாலை பணிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் திக்கித்து போயினர்.

சென்னை: சென்னையில் ராத்திரி நேரம் ரோட்டில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின், சாலை பணிகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் திக்கித்து போயினர்.

அரியணை ஏறியதில் இருந்து அரசு நிர்வாகம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் கண்டிப்பான உத்தரவு. அமைச்சர்களுக்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி… மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை தருவது, அவற்றை ஆய்வு செய்வதோடு என்று இல்லாமல் என அவ்வப்போது, அதிரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்வதும் உண்டு.

கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்டார். சென்னையை பிரித்து போட் கனமழையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். வீடுகள் இன்றி, உடமைகள் இழந்து தவித்த மக்களுக்கு தமது கையால் சாப்பாடு வினியோகித்தார்.

அமைச்சர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி நிலைமையை கள ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை துரிதபடுத்தினார். ரேஷன் கடைகளில் என்ன நடக்கிறது என்பதை தாமே நேரில் சென்று கவனித்தார். மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பணிகளை பார்வையிட்டார்.

இந் நிலையில், நேற்று மீண்டும் அதிரடியாக தமது ஆய்வு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கினார். சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட, தேனாம்பேட்டை மண்டலத்தில் மழை காரணமாக வாரன்ஸ், மகாலிங்கம் சாலைகள்  சேதம் அடைந்திருந்தன.

இந்த சாலைகளை புதியவையாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. நேற்று இரவு அதிகரடியாக களத்துக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின் அவற்றை ஆய்வு செய்தார். சாலையில் போடப்படும் தாரின் அளவு சரிவிகிதத்தில் உள்ளதா? தண்ணீர் சாலையில் தேங்காத வகையில் போடப்படுகிறதா? என்று ஆய்வு நடத்தினார்.

மேலும் தார்சாலை அமைக்கும் போது தார் வெப்பநிலை சரியாக இருக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கும், பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டார். இரவு நேரத்தில் தாரின் அளவு என்ன? எவ்வளவு ஆழத்துக்கு தார் போடப்படுகிறது என்பதை அதிகாரிகள் அளந்து முதலமைச்சரின் கூறினர்.

மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலைகள் தரமாக போடப்பட வேண்டும் என்றும் தாரின் தரம், அதன் வெப்பநிலை சரியான அளவில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதலமைச்சரின் திடீர் வருகை மற்றும் ஆய்வால் அதிகாரிகளும், பொறியாளர்களும் திணறித்தான் போயினர்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் 471 பேருந்து சாலைகள், 34,640 உட்புற சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் மழையால் சேதம் அடைந்த 312 கிமீ நீளம் கொண்ட 1656 பேருந்து சாலைகள், உட்புற சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!