ஆ.ராசா மனைவியின் உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..!

Published : May 28, 2021, 11:57 AM ISTUpdated : May 28, 2021, 12:05 PM IST
ஆ.ராசா மனைவியின் உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்..!

சுருக்கம்

சென்னையில் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.பி. ஆ.ராஜாவின் மனைவியின் உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார். 

சென்னையில் ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.பி. ஆ.ராஜாவின் மனைவியின் உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று கேட்டறிந்தார்.

திமுக துணை பொதுச்செயலரும், எம்.பி.யுமான ஆ.ராஜாவின் மனைவி பரமேஸ்வரி (52). கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள  ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று மாலை ரேலா மருத்துவமனைக்கு சென்று பரமேஸ்வரியின் உடல் நலம் குறித்து ராஜாவிடம் விசாரித்தார். பின்னர், சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருடன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான உதயநிதியும், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் உடனிருந்தனர். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!