மூடி மறைக்கப்படும் கொரோனா மரணங்கள்.. முதல்வர் ஸ்டாலினை விளாசும் எடப்பாடி பழனிசாமி..!

By vinoth kumar  |  First Published May 28, 2021, 11:37 AM IST

தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை கூட அரசு அதிகரிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை கூட அரசு அதிகரிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள். இறப்பு விவரத்தை வெளிப்படையாக அரசு வெளியிட வேண்டும். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எரியூட்ட சுடுகாடுகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்சில் காத்திருந்து உயிரிழப்போர் உடலை கவரால் மூடி ஒப்படைக்க வேண்டும்.

Tap to resize

Latest Videos

undefined

ஊடரங்கு அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மெத்தனத்தால் தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. களப்பணியாளர்களை நியமித்து வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். சேலம் இரும்பாலையில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்த அரசு இன்னும் அதை செயல்படுத்தவில்லை. 

அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள் மட்டுமே தற்போது உள்ளது. சேலம் மாவட்டத்தில் 3,800 படுக்கை வசதி மட்டுமே உள்ள நிலையில், 11 ஆயிரம் உள்ளதாக அரசு பொய் கணக்கு காட்டுகிறது. தமிழக அரசு தவறாக புள்ளி விவரங்களை கூறுவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்களை மாவட்டம் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொற்று பரவல் அதிகரிக்கும் நிலையில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை கூட அரசு அதிகரிக்கவில்லை. ஆர்டிபிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்தினால் மட்டுமே கொரோனா பாதிப்பை கண்டறிந்து தடுக்க முடியும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

click me!