அதிமுக வென்ற தொகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் திமுக அரசு பாரபட்சம்.. எம்எல்ஏக்கள் பகீர்.

Published : May 28, 2021, 11:38 AM IST
அதிமுக வென்ற தொகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் திமுக அரசு பாரபட்சம்..  எம்எல்ஏக்கள் பகீர்.

சுருக்கம்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "மதுரையில் கொரைனா பரவல் அசுர வேகத்தில் உள்ளது, 7 ஆம் தேதிக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது,

மதுரையில் அதிமுக வென்ற தொகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகளில் அரசு பாரபட்சம் காட்டுவதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து  மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் இணைந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், மதுரை மாவட்டத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது, கிராமப்புறங்களில் நோய் பரவல் தீவிரமாக இருந்து வரும் நிலையில் அதை சரிசெய்ய காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும், 

அதேபோல் தடுப்பூசி போடுவதிலும் நோய் தடுப்பு நடவடிக்கையிலும், திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, மதுரை மேற்கு, மேலூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு திமுக அரசு பாரபட்சம் காட்டுகிறது.  கிராமப்புறங்களில் அம்மா கிளினிக் மக்களின் வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது மருத்துவரின் பற்றாக்குறையை காரணம் காட்டி, அவை மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் திறக்க வேண்டும்,  கொரோனா பாதிப்பு பணியில் மதுரை மாவட்டத்தில் அதிமுக வென்ற 5 தொகுதிகளில் பாராபட்சம் பார்க்கப்படுகிறது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "மதுரையில் கொரைனா பரவல் அசுர வேகத்தில் உள்ளது, 7 ஆம் தேதிக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது, கொரைனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும், நாளுக்கு நாள் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது, அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டது, பாரபட்சம் பார்க்காமல் தடுப்பூசி வழங்க வேண்டும். முதல் அலையின் போது உணவுகள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்பட்டது"  அனைத்து தொகுதிகளிலும் தடுப்பூசி ஆம்புலன்ஸ் வசதி, ஆக்சிஜன் வசதிகள் ஆகியவற்றை செய்திட வேண்டும். அதேபோல் கிராமம் தோறும் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்த வேண்டும்.  அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடப்பட்ட  அம்மா கிளினிக்குகளை மீண்டும் திறக்க வேண்டும். கொரோனா தொற்று அடையாளம் தெரியாமலேயே கிராம மக்கள் பலர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர். இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என கூறினார், 

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "மதுரையில் கொரைனா புயல் வேகத்தில் பரவி வருகிறது, பரவலுக்கான காரணத்தை தமிழக அரசு கண்டறிய வேண்டும், உயர் அதிகாரிகளை மாற்றியதால் கொரைனா பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 3 நாட்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, மதுரைக்கு அதிக நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், அம்புலன்ஸ் இல்லாமல் கொரோனா நோயாளியை சரக்கு வாகனத்தில் ஏற்றி வரும் அவலநிலை உள்ளது, தமிழக அரசு மத்திய அரசோடு முரண்படமால் இணக்கமாக சென்று கொரைனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும், படுக்கை வசதிகளுக்கு ஏற்ற மருத்துவர், செவிலியர் இல்லை, தமிழக அரசு வெளிப்படை தன்மையோடு செயல்படவில்லை, 6 வது முறையாக ஆட்சிக்கு வந்த திமுக புதிய அரசு என சொல்ல முடியாது" என கூறினார்
 

PREV
click me!

Recommended Stories

மகுடம் சூட்ட போகும் பெண்கள்.. திமுக கூட்டணிக்கு 45% வாக்குகள்.. கருத்து கணிப்பு முடிவால் சிறகடிக்கும் அமைச்சர் நேரு
நாடாளுமன்றம் சென்ற பி.டி.உஷா.. கணவர் அதிர்ச்சி மரணம்..! வீட்டில் நடந்தது என்ன.?