குமரியில் செப்.7 பாத யாத்திரையை தொடங்கும் ராகுல் காந்தி… தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Aug 28, 2022, 8:58 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் தொடங்கும் யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் தொடங்கும் யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ராகுல் காந்தி தமிழகத்தில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதற்காக அடுத்த மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வரும் ராகுல் காந்தி, காந்தி, காமராஜர் மண்டபங்களில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் நடக்கிறார். அவரின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த பாத யாத்திரை செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்குகிறது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 2 நாட்கள் பிரியாணி கடைகள் மூட உத்தரவு !

அங்கிருந்து களியக்காவிளை வழியாக கேரளாவுக்கு பாத யாத்திரையாக செல்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அத்துடன் அன்றைய பயணம் நிறைவடைகிறது. மீண்டும் மறுநாள் காலை பாத யாத்திரையை தொடர்கிறார். கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை சுமார் 60 கி.மீ. தூரம். இந்த தூரத்தை சுமார் 3 நாட்களாக ராகுல் நடக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்கே உண்மையாக இல்லாதவர் ஓபிஎஸ்...! திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிக்க துடிக்கிறார்- இபிஎஸ் ஆவேசம்

ஒவ்வொரு நாளும் வழிநெடுக வரவேற்பு கொடுப்பது, மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது ஆகியவற்றை ஆலோசித்து வருகிறார்கள். ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது மொத்தம் 3,500 கி.மீ. தூரம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இதில், 4 நாட்கள் தமிழகத்தில் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் தொடங்கும் யாத்திரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  

click me!