விளையாட்டுத் துறை வாரிசுகளின் வசம்.. இப்போ கிடையாது தெரியுமா? சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் ஆர்.என் ரவி

By Raghupati RFirst Published Aug 28, 2022, 7:45 PM IST
Highlights

பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு  தமிழக ஆளுநர் மாளிகையில் உபசரிப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. 

தமிழ்நாட்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகள், கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட், பாராலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறப்பு உபசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற பவானி தேவி, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய மகளிர் A அணிக்காக வெண்கல பதக்கம் மற்றும் தனி நபர் போர்டு வெண்கல பதக்கம் வென்ற வைஷாலி, கிளாஸ்கோ டபுள்ஸ் போட்டியில் தங்கம் வென்ற ஸ்குவாஷ், வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கபிலன் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

இதில் சிறப்பு விருந்தினராக உலக சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இதில் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, ' 2008ல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அரசின் சார்பில் சென்றிருந்தேன். இறுதியாக ஒரே ஒரு தங்கம் மட்டுமே கிடைத்தது. தனிப்பட்ட விதத்தில் எனக்கு வலியாகவே இருந்தது.  எதிர்பாராத விதமாக அப்போது விளையாட்டுத் துறை என்பது  வாரிசுகளின் வசம் சிக்கியிருந்தது. 

மக்களால் ஏதும் செய்ய இயலவில்லை. 2-3 தலைமுறையை சேர்ந்த கூட்டமைப்பினர் சுற்றுலாவாக பெய்ஜிங் வந்திருந்தனர். தற்போது நம்பிக்கையானவர்கள் வருவது அதிகரித்து வருகிறது. நீங்கள் நாட்டுக்காக என்ன சேவை செய்கிறீர்கள் என உங்களுக்கு தெரிவதில்லை. நாட்டில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டகாவும், உத்வேகத்தையும் தருகிறீர்கள். நாட்டை பெருமைப்படுத்துகிறீர்கள். 2047ல் விளையாட்டில் சிறந்த நாடாக இந்தியா மாற வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு..விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 2 நாட்கள் பிரியாணி கடைகள் மூட உத்தரவு !

விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களை  துணைவேந்தர்கள் உத்வேகம் அளித்து சாதிக்க ஊக்கமளிக்க வேண்டும். 2008 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக விளையாட்டுத் துறை என்பது வாரிசுகளின் வசம் சிக்கியிருந்தது. மாநிலத்தில் இருந்து சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டு வீரர்களை ஆளுநர் தனியாக அழைத்து பாராட்டு விழா நடத்துவது இதுவே முதல் முறையாகும்' என்று பேசினார்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!