
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரு குடும்பங்களுக்கும் கோபாலபுரம் வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நிற்கிறது… முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!
சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த இரு மாதங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது ஏழாவது முறையாகும். இவர்களையும் சேர்த்து 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22 ஆம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐந்தாவது நாளில் அடுத்த அத்துமீறல் நடந்துள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் ரஜினி, சிவாஜியையே மிஞ்சியிருப்பார் ஓபிஎஸ்.. யாருக்கும் அதிமுகவில் இடமில்லை - தடாலடி ஜெயக்குமார்!
ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழகத்திலிருந்து எதிர்ப்பு எழுவதும், அடுத்த சில நாட்களில் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி விடக்கூடாது. மீனவர்கள் கைது செய்யும் சிங்களப்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். இப்போது கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் வாடும் 10 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 95 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.