எதிர்க்கட்சிகளின் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்த முதல்வர் ஸ்டாலின்? என்ன காரணம்? அவரே கொடுத்த விளக்கம்.!

By vinoth kumar  |  First Published Jun 24, 2023, 6:35 AM IST

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று இரவு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 


செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். 

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று இரவு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். பின்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

கேள்வி:- இந்த கூட்டம் நடந்து முடிந்தபின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. நீங்களும், ஆம் ஆத்மி கட்சியும் கலந்து கொள்ளவில்லை. அதில் ஏதாவது காரணம் இருக்கிறதா ?

மாண்புமிகு முதலமைச்சர் பதில்:- நன்றி சொல்லி முடிக்கும் வரை நான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அதற்குப்பிறகு எனக்கு விமான நிலையம் செல்ல நேரமாகிவிட்டது. மதிய உணவுக்கு பிறகுதான் செய்தியாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள். அதனால் மதிய உணவு கூட சாப்பிட முடியாமல், விமானத்தில் தான் சாப்பிட்டேன். அவர்களிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். வேறு எந்த காரணமும் இல்லை. அதுதான் உண்மை.

கேள்வி:- ஆத் ஆத்மி கட்சி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். டெல்லி Ordinance தொடர்பாக காங்கிரஸ் கட்சி அவர்களது நிலைப்பாடு குறித்து இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. அதுகுறித்து...

முதலமைச்சர் பதில்:- நீங்கள் அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:- இரண்டாம் கட்ட கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள். முதற்கட்ட கூட்டத்தில் முழுமையாக எதுவும்
எட்டப்படவில்லையா? எதற்காக இரண்டாவது கூட்டம்?

முதலமைச்சர் பதில்:- முதல் கூட்டத்தில் கூடினோம். என்ன செய்வது என்பது பற்றி முடிவு செய்திருக்கிறோம். போகப்போக அடுத்தக்
கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறோம் என்பதை தெரிவிக்கிறோம்.

கேள்வி:- பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து....

முதலமைச்சர் பதில்:- அது இன்னும் முடிவு செய்யவில்லை. நீங்கள் எல்லோரும் ஆர்வமாக இருப்பதைப் பார்த்தால். பிரதமர் வேட்பாளர் யார்
என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

click me!