திராவிடம்னா என்னன்னு கேட்குகிறீங்களா…? கோமாளிகளா…! ஓங்கி அடித்த ஸ்டாலின்

By manimegalai aFirst Published Oct 28, 2021, 8:54 AM IST
Highlights

திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் சில கோமாளிகள், அறியாதவர்கள் அதை பற்றி கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

திராவிடம் என்றால் என்ன என்று கேட்கும் சில கோமாளிகள், அறியாதவர்கள் அதை பற்றி கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் கற்பித்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கல்வி நிலையங்கள் ஒட்டு மொத்தமாக மூடப்பட்டதால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை குறைந்துவிட்ட காரணத்தால் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.

வரும் 1ம் தேதி முதல் 1ம் வகுப்பு மாணவர்கள் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளிகள் திறக்கப்படுகின்றன. விருப்பப்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந் நிலையில், தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் இந்த புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த புதிய திட்டத்தின்படி மாணவர்களின் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள அரசு இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல் செயல்பாடுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக திருச்சி, மதுரை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் என 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம் முதலியார்குப்பத்தில் இந்த திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

கொரோனா என்னும் பெருந்தொற்றால் இழந்த கல்வி காலத்தை ஈடுகட்ட அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். அதற்கான பள்ளி வகுப்பு நேரங்களில் மட்டும் மாணவர்களை மடை மாற்றம் செய்துவிட முடியாது.

மிகபெரிய கல்வி புரட்சி, மறுமலர்ச்சிக்கு அடிக்கல் இப்போது நாட்டப்பட்டு உள்ளது. மிக பெரும் விஷயங்கள் எல்லாம சின்ன, சின்ன அளவுகளில் இருந்து தான் ஆரம்பாகின்றன.

நூற்றாண்டுகளாக நமக்கு மறுக்கப்பட்ட கல்வி திண்ணை பள்ளிக்கூடங்கள் வழியாக கிடைத்தது. அதற்கு முக்கிய பங்காற்றியது ஆரம்ப கால திராவிட இயக்கம்.

திராவிடம் என்றால் என்ன? என்று இப்போது கேட்கும் சில கோமாளிகளும், அதை அறியாதவர்களும் அதுபற்றி கேள்விகள் கேட்டு வருகின்றனர். இதுவே திராவிடத்தின் கொள்கை என்பதை மறந்துவிடக்கூடாது.

வீட்டுக்கே வந்து கற்றுத்தரும் கடமையின் தொடர்ச்சி தான் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டமாகும். எப்போதும் நெருக்கடி என்று ஒன்று வரும் போதும் தான் புதிய பாதை பிறக்கும். அப்படியான கொரோனா என்னும் நெருக்கடியில் உதயமானது தான் இந்த இல்லம் தேடி கல்வி என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

click me!