BREAKING முதல்வர் பாதுகாப்புக்கு சென்ற காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி ..!

Published : Jan 29, 2021, 04:54 PM ISTUpdated : Jan 29, 2021, 05:02 PM IST
BREAKING முதல்வர் பாதுகாப்புக்கு சென்ற காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா.. எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி ..!

சுருக்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பபடுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்புக்கு சென்ற காவலர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பபடுத்தியுள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 23, 24ம் தேதி கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, முதல்வர் பாதுகாப்பு பணிக்காக கடந்த 22ம் தேதி சென்று விட்டு  ஈரோடு போலீசார் 150 பேர் 24ம் தேதி ஊர் திரும்பினர்.

இந்நிலையில்,  ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ. தங்கவேலுக்கு (59) திடீரென காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இதைனயடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த போலீசார் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில், பிரபாகரன் (35), சீனிவாசன் (35) ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று மேலும் 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு