மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி நாடாக இந்தியா மாறும்.. அதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை... மோடி உறுதி.

Published : Jan 29, 2021, 03:28 PM IST
மிகப்பெரிய ராணுவ தளவாட உற்பத்தி நாடாக இந்தியா மாறும்.. அதற்கான நாள் வெகுதூரத்தில் இல்லை... மோடி உறுதி.

சுருக்கம்

தேசிய மாணவர் படை பயிற்சிக்கான உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஆயுத பயிற்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகளின் ஒவ்வொரு பிரிவும் சிறப்பானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்தியா ஆயுதங்களை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடாக இருந்து வரும் நிலையில், விரைவில் மிகப்பெரிய போர்  தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாடாக மாறும் எனவும், அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

(ஜன-27 ) தலைநகர் டெல்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் என்சிசி என்று அழைக்கப்படும் தேசிய மாணவர் படையில் அணிவகுப்பு நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய பாதுகாப்பு தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் முப்படை தலைவர்களும் கலந்து கொண்டனர். 

அந்நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி தேசிய பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், கூறியதாவது:  நாம் கடந்து வந்த கொரோனா தொற்று காலம் மிகவும் சவாலானது, ஆனால் அது நாட்டிற்கான அசாதாரண வேலைக்கான வாய்ப்புகளை கொண்டு வந்தது. நாட்டின் திறனை மேம்படுத்தியது. சாதாரண நிலையிலிருந்து சிறந்த நிலைக்கு நம்மை உயர்த்தியது. இதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. நாட்டின் எல்லைப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை விமானப்படை மற்றும்  கடற்படையில் ஒரு லட்சம் தேசிய பாதுகாப்பு படையினர் பயிற்சி பெற்று வருகின்றனர். அப்பயிற்சியில் மூன்றில் ஒருபங்கு பெண்கள் ஆவர். 

தேசிய மாணவர் படை பயிற்சிக்கான உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஆயுத பயிற்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆயுதப்படைகளின் ஒவ்வொரு பிரிவும் சிறப்பானது என்பதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆயுதப் படைகளை நவீனமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நமது நாடு மிகச் சிறந்த போர் தளவாடங்களை பெற்றுள்ளது.

குறிப்பாக ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்து இந்தியா படையில் இணைத்து வருகிறது, மூன்றாவது தொகுப்பு ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் வழியாக இந்தியா வந்துள்ளது. வழியில் ஐக்கிய அமீரகம், சவுதிஅரேபியா, கிரீஸ் போன்ற நாடுகளில் நடுவானில் பறந்தபடி எரிபொருள் நிரப்பிக்கொண்டு ரஃபேல் இந்தியா வந்து சேர்ந்துள்ளது. இது இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்குமான உறவை காட்டுகிறது. 

இந்தியா தற்போது ராணுவ தளவாட த்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்து வருகிறது. ஆனால் விரைவில் மிகப்பெரிய போர் தளவாட உற்பத்தி நாடாக மாறும்.  அதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை என அவர் கூறியுள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!