கிழக்கு லடாக் நிகழ்வு இந்தியாவை மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது. சீனாவுக்கு ஜெய்சங்கர் வைத்த 7 நிபந்தனைகள்.

By Ezhilarasan BabuFirst Published Jan 29, 2021, 4:18 PM IST
Highlights

உண்மையான கட்டுப்பாட்டு  கோட்டின் மேலாண்மை தொடர்பாக ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். எல்லைப் பகுதிகளை கையாள்வது சம்பந்தமாக எது நடந்தாலும் உண்மையான கட்டுப்பாட்டு கோடு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். அது மதிக்கப்பட வேண்டும்.
 

கடந்த 2020 இல் நடந்த நிகழ்வுகள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை ஆழமாக பாதித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வேறுபாடுகளை தணிப்பதற்கு பதிலாக 2020 நிகழ்வுகள் இருதரப்பு உறவுகளும் கடுமையாக பாதித்திருக்கிறது, அது மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது என்றும், கிழக்கு லடாக் விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் ஷங்கர் கூறியுள்ளார்.

இந்தியா சீனா உறவுகள் குறித்த ஆன்லைன் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் இன்று  பாதிக்கப்பட்டு இருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்படும் நிகழ்வுகள் இருநாடுகளுக்கும் மட்டுமல்ல முழு உலகத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு லடாக்கிலிருந்து படைகளை  பின்வாங்க மறுப்பது முதல் அமைதி மற்றும் அமைதியை குலைப்பதற்கான நடவடிக்கைகளை சீனா கையாண்டு வருகிறது என ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை எல்லையில் துருப்புகளை  திரட்டியதற்கான நம்பமான விளக்கம் சீனாவிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இரு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவு ஏற்படுவதற்கு மேலும் ஏழு வகையான  நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார். உண்மையான கட்டுப்பாட்டு  கோட்டின் மேலாண்மை தொடர்பாக ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் முழுமையாக கடைபிடிக்கப்பட வேண்டும். எல்லைப் பகுதிகளை கையாள்வது சம்பந்தமாக எது நடந்தாலும் உண்மையான கட்டுப்பாட்டு கோடு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். அது மதிக்கப்பட வேண்டும். ஒருதலைப்பட்சமாக சூழ்நிலையை மாற்றுவதற்கான எந்த ஒரு  முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. அது ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது. உலக அமைதி மற்றும் அதன் வளர்ச்சிக்கு இந்தியாவும் சீனாவும் உறுதி பூண்டுள்ள நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

புது தில்லி மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவுகள் ஸ்திர தன்மையுடன் இருக்க வேண்டுமென்றால், கடந்த 30 ஆண்டுகளாக இருநாடுகளும் கடைப்பிடித்து வரும் கொள்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும். சீனாவுடனான உறவை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை கடந்த கால அனுபவங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளன. இருநாடுகளின் நலனுக்காக சரியான வழிகாட்டுதல்களை கடந்தகால அனுபவத்திலிருந்து நாம் பெற முடியும். இரு நாடுகளுக்கும் இடையே உறவுகளை வளர்ப்பது. பரஸ்பர மரியாதை  கொடுப்பது, பரஸ்பர உணர்திறன், பரஸ்பர ஆர்வம் போன்ற பரஸ்பரத்தின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து அவர் பேசினார். 

எல்லையில் பிரச்சினையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை சுமுகமாக வாழ முடியும் என்று நினைப்பது பகுத்தறிவின்மையே ஆகும், எனவே எல்லைப் பிரச்சனையை தீர்த்து அமைதியாக வாழ முயற்சிக்க சீனா முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

 

click me!