இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி நடப்பது தெளிவாக காட்டுகிறது.. மோடி அரசை மோசமாக விமர்சித்த மாணிக்கம் தாகூர்.!

By vinoth kumarFirst Published Oct 8, 2021, 12:30 PM IST
Highlights

ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் விருதுநகரில் நடக்கின்ற 100 நாள் திட்டத்தை பார்க்க வரவேண்டும். மக்களுக்கான இந்த திட்டத்தைகெடுக்க பங்காளிகளாக அண்ணாமலையும், சீமானும் சேர்ந்து இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் சீமான் மற்றும் அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் 4 பேர் மீது மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் கார் ஏற்றி படுகொலை செய்த கொடுமை நடந்தது. விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கடந்த 2 நாட்களாக வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஜனநாயக விரோதப்போக்கு. மேலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சட்டீஸ்கர் முதல்வர், பாஞ்சாப் முதல்வர் ஆகியோர் லக்னோ வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது இந்தியாவில் ஹிட்லர் ஆட்சி நடக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. 

இதையும் படிங்க;- மிகப்‌ பெரிய ஜனநாயகப்‌ படுகொலை.. அதிமுகவை கண்டு அஞ்சி நடுங்கும் தில்லுமுல்லு திமுக.. கொதிக்கும் OPS, EPS..!

ஏழை மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் விருதுநகரில் நடக்கின்ற 100 நாள் திட்டத்தை பார்க்க வரவேண்டும். மக்களுக்கான இந்த திட்டத்தைகெடுக்க பங்காளிகளாக அண்ணாமலையும், சீமானும் சேர்ந்து இருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

இதையும் படிங்க;- வேலூரில் பயங்கரம்.. பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி கணவன், மனைவி துடிதுடித்து உயிரிழப்பு..!

பட்டாசு தொழிலை அந்நிய செலவாணி ஈட்டும் தொழிலாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர தொழிலை குற்ற தொழிலாக பாரக்க வேண்டாம். கொரோனாவுக்கு பின்பு சீன பட்டாசுகளை உலக மக்கள் வாங்க தயங்குகிறார்கள். பட்டாசால் மாசு ஏற்படுகிறது என்ற தவறான புரிதல் கொண்டிருப்பவர்கள் சிவகாசி பகுதிக்கு நேரில் வந்து பட்டாசு ஆலைகளை பார்க்க வேண்டும் என  மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

click me!