மொட்டையடிக்கும் ஊழியர்களுக்கு ரூ.5000 கொடுக்கும் ஒரே அரசு இதுதான்.. திமுகவை பங்கமாக கிண்டல் செய்யும் துரைசாமி

By vinoth kumarFirst Published Oct 8, 2021, 11:37 AM IST
Highlights

இந்து மதக் கலச்சாரத்தை சீர்குலைக்கும் செயலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.  வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோவில்களை அரசு மூடுகிறது. கேட்டால் வேறு வேறு காரணங்களை கூறுகிறது.

கோயிலுக்குச் சொந்தமான தங்க நகைகளை உருக்கி விற்கும் முயற்சியில் அமைச்சர் சேகர்பாபு ஈடுபட்டு வருகிறார். அவரை உடனே பதவியில் இருந்து இருக்க வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியுள்ளார். 

தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களைத் திறக்கக் கூடாது என்றும் கொரோனா 3வது அலை அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதர மதம் சாா்ந்த ஆலயங்களில் எவ்வித கட்டுப்பாடுமின்றி சிறப்புத் தொழுகை, பிரார்த்தனை உள்ளிட்டவை அனைத்து நாள்களிலும் நடைபெறுவதாக பாஜக குற்றம் சாட்டி வந்தது.

இதனையடுத்து, இந்து கோவில்களை அனைத்து நாள்களிலும் திறக்கக் கோரி நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி. துரைச்சாமி கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- இந்து மதக் கலச்சாரத்தை சீர்குலைக்கும் செயலை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.  வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோவில்களை அரசு மூடுகிறது. கேட்டால் வேறு வேறு காரணங்களை கூறுகிறது. 

ஆனால், டாஸ்மாக், கல்லூரிகள், மால்கள், கடைகள், பேருந்துகள் இயங்குகின்றன. இந்தியாவிலேயே கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூ.5000 கொடுக்கும் ஒரே அரசு தமிழக அரசுதான். பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையை படிப்படியாக சரியான நேரத்தில் குறைக்கும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு எந்த அடிப்படையில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்குவதாக தெரிவித்தார்.அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அனைத்து கட்டுப்பாடுகளுடன் இந்து கோயில்களை திறக்க வேண்டும். கலாச்சாரத்திற்கு, மதத்திற்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என்றார்.

click me!