இதுதான் திமுகவின் சாதனை.. பட்டியல் போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.

By Ezhilarasan Babu  |  First Published Oct 8, 2021, 10:43 AM IST

ஆனால் இந்த ஐந்து மாத திமுக ஆட்சி மக்களை ஏமாற்றி உள்ளதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் செயல்படுத்தி வருகின்றனர். 


கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுதான் திமுக அரசின் சாதனை என்று, முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து, அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பொய் வாக்குறுதிகளை அளித்தது. அதை மக்கள் நம்பி ஓட்டு போட்டனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: எச். ராஜா, சீமான் ஆகியோர் தமிழக அரசியலுக்கே ஒரு சாபக்கேடு... டார்டாராக கிழித்த ஜெயக்குமார்.

ஆனால் இந்த ஐந்து மாத திமுக ஆட்சி மக்களை ஏமாற்றி உள்ளதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் செயல்படுத்தி வருகின்றனர். அதிமுகவினர் தொடங்கிவைத்த பாலங்கள், மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்ட பலவற்றை இப்போது திமுக திறந்துவைத்து வருகிறது. மருத்துவக் கல்விக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

இதையும் படியுங்கள்: மோடிக்கும் தமிழுக்கும் சம்பந்தம் இல்லையா.? உங்க வீட்டு பிள்ளைகள் தமிழில் படிக்கிறார்களா.? டாராக கிழித்த வானதி.

அதுதான் அவர்களின் சாதனையாக இருந்து வருகிறது. குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறினார் அதையும் நிறைவேற்றவில்லை.  சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்றார்கள் அதுவும் வழங்கப்படவில்லை, முதியோல் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றார்கள் அதையும் செய்யவில்லை. இப்படி எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை, ஆகவே உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் கூறினார்.
 

click me!