இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... மாணவ- மாணவிகளுக்கு இன்பச் செய்தி..!

Published : Oct 08, 2021, 11:39 AM IST
இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... மாணவ- மாணவிகளுக்கு இன்பச் செய்தி..!

சுருக்கம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் 4 கல்லூரிக்கு உயர்க்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார். 

சென்னை கொளத்தூரில் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில்  அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற இடத்தில்  பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி என்ற பெயர்களில் அந்த 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

இந்நிலையில், 4 கல்லூரிகளிலும் பிசிஏ, பி.காம், பிபிஏ, பி.எஸ்சி என்று 4 பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை. இன்று முதல் வரும் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!