டெண்டரில் பங்கேற்க பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் உள்ளிட்ட 3 பேர் விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது அவர்களிடம் ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்து தாக்கி விண்ணப்பத்தை கிழித்து வீசியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி ஏலம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டபோது வன்முறையில் ஈடுபட்ட திமுகவை சேர்ந்த 12 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம், நாரணமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில் குவாரிகளை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் டெண்டர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த டெண்டர் கோரி அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அந்த வகையில் இந்த டெண்டரில் பங்கேற்க பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் உள்ளிட்ட 3 பேர் விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது அவர்களிடம் ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்து தாக்கி விண்ணப்பத்தை கிழித்து வீசியுள்ளனர். மேலும், அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர்.
இதையும் படிங்க;- பணத்துக்காக கொலை செய்யவும் தயங்காதது தான் திராவிட மாடல் ஆட்சியா? நாராயணன் திருப்பதி விளாசல்.!
இந்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவினரின் அராஜக செயலுக்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, நிர்வாகக் காரணங்களுக்காக கல் குவாரி ஏலத்தை ரத்து செய்வதாக ஆட்சியர் கற்பகம் அறிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் தற்போது இரவோடு இரவாக திமுகவினர் 12 பேர் பெரம்பலூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஆளுநர் மாளிகையில் நடந்ததை வீடியோ போட்டு காட்டிய காவல்துறை, ஆளுங்கட்சி அராஜகத்தை வீடியோ வெளியிட தயாரா.? இபிஎஸ்
ஏற்கனவே தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் தனி உதவியாளர் மகேந்திரன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.