தமிழகம் முழுவதும் 10ஆயிரம் கொடிகம்பம் நடப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், மாநகாரட்சி மற்றும் நகராட்சியின் அனுமதி பெறாத காரணத்தால் கொடிகம்பம் நட காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக கொடிக்கம்பம்-அண்ணாமலை
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர், ‘சீ ஷோர் டவுன்’ 6-வது அவென்யூவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டின் முன்பு கடந்த மாதம் 50 அடி உயரமுள்ள கொடிகம்பத்தை பாஜகவினர் ஊன்றியுள்ளனர். இதற்கு அனுமதி ஏதும் பெறவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கொடிக்கம்பம் நடப்படுவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் பாஜகவினரும் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனை அடுத்து அண்ணாமலையை விட்டு அருகே அமைக்கப்பட்டகொடிக்கம்பத்தை ஜேசிபி வாகனம் மூலம் அகற்றப்பட்டது.
10ஆயிரம் கொடிக்கம்பம்
இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் ஜேசிபி வாகனத்தை அடித்து நொறுக்கினர். பரபரப்பான சூழலை ஏற்பட்டதை அடுத்து இந்த சம்பவத்தில் அண்ணாமலையின் வலதுகரமாக இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதன்படி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என அறிவித்திருந்தார்.
அனுமதி மறுத்த போலீஸ்
இதற்கான பணிகளை பாஜகவினர் தீவிரப்படுத்தி வந்த நிலையில் காவல்துறையினர் கொடிக்கம்பம் நட அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னை முழுவதும் முறையான அனுமதி பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகாராட்ச்சியில் இருந்து அனுமதி பெற்றதற்கான எந்தவித கடிதமும் இணைக்கவில்லையென கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அனுமதி மறுக்க்ப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி பெறாத பாஜக கொடி கம்பத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்தேன் பாஜகவினர் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்துவதா? அல்லது சட்ட ரீதியாக நீதிமன்றத்தை நாடுவதாக என ஆலோசனைமேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்