பெரம்பலூர் கல் குவாரி ஒப்பந்தத்தை தங்களுக்கே தர வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்க வந்த பாஜகவினர் மற்றும் காவல் துறையினரை திமுகவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அரசு பணி ஒப்பந்தங்களை பெறுவதற்காக வன்முறை வெறியாட்டத்தில் திமுகவினர் ஈடுபடுவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை தெளிவாக்குகிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் செங்குணம், நாரணமங்கலம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கனிமவளங்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் டெண்டர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த டெண்டர் கோரி அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அந்த வகையில் இந்த டெண்டரில் பங்கேற்க பாஜக பிரமுகரும், கவுல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவருமான கலைச்செல்வனும் மற்றும் தொழில்துறை பிரிவு மாவட்டத் தலைவரான முருகேசன் என்பவரும் விண்ணப்பத்தை பெட்டியில் போடுவதற்காக வந்தபோது அவர்களிடம் ஆளுங்கட்சியினர் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளனர்.
இதையும் படிங்க;- ரவுடிகளை வைத்து கட்சி நடத்தும் திமுக; மக்கள் திருப்பி அடித்தால் கட்சி காணாமல் போய்விடும் - அண்ணாமலை எச்சரிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிற கட்சியினர் விண்ணப்பிப்பதை தடுத்து திமுகவினர் வாக்குவாதம் செய்ததாக புகாரை அடுத்து கல்குவாரிகளுக்கான ஏலத்தை மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தார். இந்நிலையில், பணத்திற்காக கொலை செய்வதற்கு கூட தயங்காத நிலை திமுக ஆட்சியில் தொடர்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி எக்ஸ் தள பதிவில்;- பெரம்பலூர் கல் குவாரி ஒப்பந்தத்தை தங்களுக்கே தர வேண்டும் என்றும், ஏலத்தில் பங்கேற்க வந்த பாஜகவினர் மற்றும் காவல் துறையினரை திமுகவை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இரு நாட்களுக்கு முன் சென்னை எண்ணூரில் இதே போன்ற ஒப்பந்த விவகாரத்தில் திமுக வின் இரு குழுக்களின் இடையேயான மோதலில் ஒருவர் நடு தெருவில் ஓட விட்டு படுகொலை செய்யப்பட்டது கொடூரம்.
இதையும் படிங்க;- ஆளுநர் மாளிகையில் நடந்ததை வீடியோ போட்டு காட்டிய காவல்துறை, ஆளுங்கட்சி அராஜகத்தை வீடியோ வெளியிட தயாரா.? இபிஎஸ்
அரசு பணி ஒப்பந்தங்களை பெறுவதற்காக வன்முறை வெறியாட்டத்தில் திமுகவினர் ஈடுபடுவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதை தெளிவாக்குகிறது. அரசு ஒப்பந்தங்களில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடைபெறுவதை இந்த சம்பவங்கள் உறுதி செய்கின்றன. பணத்திற்காக கொலை செய்வதற்கு கூட தயங்காத நிலை திமுக ஆட்சியில் தொடர்வதற்கு பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.