கிறிஸ்துமஸ் கேக் இனிக்கும்... பொங்கல் கசக்குமா..? திருமாவளவனுக்கு எதிர்ப்பு..!

By Thiraviaraj RMFirst Published Dec 31, 2019, 12:27 PM IST
Highlights

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என  தொல்.திருமாவளவன் கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

‘’நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, CAA, NPR & NRCக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகளும் ஜனநாயக சக்திகளும் தவிர்க்க வேண்டும். போராட்டங்கள் நிறைந்த ஒரு சூழலில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்’’எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ’’கிறிஸ்துமஸ் நாள் அன்றும் இதே CAA, NRC, நாட்டை சூழ்ந்திருந்தது. அப்போது மட்டும் அங்கே சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடியது நீங்கள் தானே..! இந்த அறிவிப்பை  கிருஸ்துமஸ் பண்டிகையின் போதும் சொல்லி இருக்கலாமே. 

கிறிஸ்துமஸ் நாள் அன்றும் இதே CAA, NRC, நாட்டை சூழ்ந்திருந்தது. அது மட்டும் கொண்டாடலாமா? pic.twitter.com/BejggaT5UA

— Mohan Raj (@IammohanrajRaj)

 

அண்ணன் திருமா அவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது 1 வருட எம்.பி., பதவிக்கான ஊதியத்தை விட்டு கொடுப்பார் என மக்கள் எதிர்பார்ப்பு. தமிழர்களின் பெரும்பான்மை சமூகத்தின் அடையாளமாக திகலும் திராவிட அரசியலின் கொத்தடிமை போல் நடந்தது கொள்வது வேதனை’என பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தலைவரே இந்த அறிவிப்பை கிருஸ்துமஸ் பண்டிகை அப்போ சொல்லியிருக்காலமே!

— கிராமத்து கலை (@vina00vina)

 

ஏசுபெருமானின் ஜனநாயகக் கோட்பாடுகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்! என தொல்.திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியதையும் பகிர்ந்து வருகின்றனர்.
 

தமிழர்களின் பெரும்பான்மை சமூகத்தின் அடையாளமாக திகலும் திருமா, திருட்டு திராவிட வடுக அரசியலின் கொத்தடிமை போல் நடந்தது கொள்வது வேதனை. pic.twitter.com/FIiYfGWjSt

— D A R k P R I N C E 🔱 (@ajeethkumarvp)

 

click me!