பொங்கலை கொண்டாடாதீங்க... தொல்.திருமாவளவன் உத்தரவு..!

Published : Dec 31, 2019, 11:42 AM IST
பொங்கலை கொண்டாடாதீங்க... தொல்.திருமாவளவன் உத்தரவு..!

சுருக்கம்

ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகளும் ஜனநாயக சக்திகளும் தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர், ‘’நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து, CAA, NPR & NRCக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களை விடுதலைச் சிறுத்தைகளும் ஜனநாயக சக்திகளும் தவிர்க்க வேண்டும். போராட்டங்கள் நிறைந்த ஒரு சூழலில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். 

அதேபோல பொங்கல் பண்டிகையையும் தவிர்க்க வேண்டும் என தோழமையோடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். தமிழர்களுக்கென்று உள்ள ஒரே பண்டிகை பொங்கல் திருநாள் தான் என்பதை அறிவேன். மற்ற அனைத்தும் மதம் சார்ந்த பண்டிகைகளாக அமைந்து விட்ட நிலையில் பொங்கலை கொண்டாட வேண்டும் என்கிற ஆர்வம் நமக்கு மேலோங்கி இருக்கும்.

 

அதற்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்பது எனது கருத்து என்றாலும் கூட இன்றைக்குள்ள சூழலில் புத்தாண்டை கொண்டாடுவதோ பொங்கலை கொண்டாடுவதோ உசிதமான ஒன்றாக இல்லை. கொண்டாட்ட மனநிலையில் நாம் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் நான் பொங்கலையும், புத்தாண்டையும் கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என அனைத்து சனநாயக சக்திகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!