கவனத்தை சிதறடிக்க கவர்னரைச் சிக்கவைத்த எடப்பாடியார்? நேரம்பார்த்து ஆப்பு அடிக்க ஐடியா கொடுத்த அமைச்சர்? எதற்காக?

 
Published : Apr 23, 2018, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
கவனத்தை சிதறடிக்க கவர்னரைச் சிக்கவைத்த எடப்பாடியார்? நேரம்பார்த்து ஆப்பு அடிக்க ஐடியா கொடுத்த அமைச்சர்? எதற்காக?

சுருக்கம்

Chief Minister who took over the governor

கடந்த மார்ச் 14ம் தேதி 4 கல்லூரி மாணவிகளை சில பெரிய மனிதர்களுக்கு பாலியல் ரீதியாக படுக்கைக்கு அனுப்ப வற்புறுத்தி தொலைபேசியில் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்திடம் 4 மாணவிகள் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நிர்மலா தேவியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.  மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடந்த வாரம் பேராசிரியை நிர்மலா கைது செய்யப்பட்டார்.
 

தற்போது சிபிசிஐடி விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் நிர்மலாதேவியிடம் நான்காவது நாளாக கிடுக்குப்பிடி விசாரணை நடந்து வருகிறது. மாணவிகளிடம் பேசிய ஆடியோவை நொடிக்கு நொடி தவாராமல் கேட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த ஆடியோ எப்படி வெளியில் வந்தது? சுமார் ஒரு மாதத்திற்கு முன் பேசிய இந்த ஆடியோ இப்போது வந்ததற்க்கான நகாரணம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆளாய் விவகாரம் என தமிழகமே போரட்டகலாமாக காட்சியளித்தது. ஆனால் தற்போது அனைத்தையும் மறந்துவிட்டு புரோக்கர் நிர்மலா தேவியின் பக்கம் திரும்பிவிட்டது. ஆமாம் கவர்னர் ஒருபக்கம் பிரஸ் மீட், எதிர்க்கட்சிகள் ஒருபக்கம் போராட்டம் எனப் பற்றி எறிந்த நிலையில், வழக்கம் போல ஆளும் தரப்பு ஒட்டுமொத்தமாக திசை திருப்பிவிட்டது. அதாங்க நிர்மலா தேவி விவகாரம், மார்ச் மாதம் 13ஆம் தேதி நிர்மலா தேவிக்கும் மாணவிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் இது என்பது தெரியவந்திருக்கிறது.

இந்த ஆடியோ உரையாடல் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்ததாம்,  ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த ஆடியோ இப்போது எப்படி வெளியானது என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது. ‘இந்த ஆடியோ விவகாரம் கல்லூரி நிர்வாகத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே தெரியுமாம். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவிகள் இந்த ஆடியோ பதிவை ஒரு சிடியாகப் போடுவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள இன்டர்நெட் சென்டரில் கொடுத்திருக்கிறார்கள். அங்கிருந்துதான் இந்த சிடி கல்லூரி நிர்வாகத்துக்கு லீக் ஆகியிருக்கிறது.

அந்த ஆடியோ உரையாடலைக் கேட்டதுமே கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட பேராசிரியையைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டதாம். பேராசிரியையுடன் பேசிய மாணவிகளை அழைத்துக் கல்லூரியின் தரப்பில் சமாதானமும் பேசியிருக்கிறார்கள். அப்போது ‘இந்த விஷயம் வெளியே போனால் கல்லூரிக்குத்தான் கெட்ட பெயர் வரும்’ என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அதனால் மாணவிகளும் இந்த விவகாரம் தொடர்பாக வாய் யாரிடமும் சொல்லவில்லை.

இதனையடுத்து இந்த விஷயம் வெளியில் வராது என நம்பிக்கொண்டிருந்த கல்லுரி நிர்வாகத்திற்கு செம்ம அதிர்ச்சி என்னன்னா? கல்லூரி நிர்வாகம் கேட்ட அதே ஆடியோ வைரலாக வாட்சாப்பில் உலாவியது. கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவரும் லோக்கல் ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரும் நண்பர்கள். கம்ப்யூட்டர் சென்டர் நடத்துபவர், விஷயத்தை மதுரை அமைச்சரின் சொந்தக்காரருக்கு சொல்லியிருக்கிறார்.

ஆளுங்கட்சிக்காரரோ இந்த விஷயத்தை அமைச்சர் ஒருவரின் கவனத்துக்குக் கொண்டு போயிருக்கிறார். ‘அப்படியா...’ என அதிர்ச்சியுடன் கேட்ட அமைச்சர், ‘நான் அந்த ஆடியோவைக் கேட்கணுமே... எனக்கு அனுப்பி வையிங்க..’ எனச் சொல்ல.. அமைச்சருக்கு அந்த ஆடியோ அனுப்பப்பட்டதாம். அதைக் கேட்டதுடன் நிற்காமல், முதல்வர், துணை முதல்வர் என எல்லோரிடமும் சொல்லியிருக்கிறார் அமைச்சர். அதன் பிறகு இந்த ஆடியோ விவகாரத்தில் அரசியல் ஆரம்பித்திருக்கிறது.

தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்துவரும் கவர்னருக்கு இந்த ஆடியோவை வைத்து நெருக்கடி கொடுக்கலாம் எனத் துணை முதல்வருக்கு நெருக்கமான ஒருவர் ஐடியா கொடுத்திருக்கிறார். நான்கு நாட்களாக இது தொடர்பான முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனையை நடத்தியிருக்கிறார். அதன் பிறகு அந்த ஆடியோவைக் கைதேர்ந்த ஆடியோ இஞ்ஜினியர் ஒருவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.

‘இதுல அந்தப் பொண்ணுங்க பேரு எங்கேயும் வந்துடக் கூடாது... அதுபோல சவுண்ட் போட்டு நல்லா எடிட் பண்ணிக் கொடுங்க’ எனச் சொல்ல. அதேபோல அந்த மாணவிகள் பேசும் வாய்ஸ் குறைவான ஒலியாகவும், பேராசிரியை பேசுவது அதிக சத்தம் வருவது போலவும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. பிறகுதான் அருப்புக்கோட்டையில் உள்ள ஒருவரின் செல்போனில் இருந்தே முதலில் இந்த ஆடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. முதல்வர் நினைத்தது போலவே இந்த ஆடியோவால் கவர்னருக்கு நெருக்கடிகள் அதிகமாகிவிட்டன. கல்லூரி நிர்வாகமோ, சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் சென்டர்காரர் மீது கடுமையான கோபமாகி அழைத்து விசாரித்திருக்கிறார்கள். அவரோ, அமைச்சர் பெயரைச் சொன்னதும், கல்லூரி தரப்பு கப்சிப் ஆகிவிட்டதாம்.

PREV
click me!

Recommended Stories

அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!
மு.க.ஸ்டாலினை ரவுண்டுகட்டும் நெருக்கடிகள்... கால்வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி.. திகிலில் திமுக..!