சொன்னதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் வைப்புத் தொகை.

By Ezhilarasan BabuFirst Published Jun 16, 2021, 1:37 PM IST
Highlights

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும்  குழந்தைகள் அதே  பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, 
தனியார் பள்ளியாக இருந்தால், கல்வி உரிமைச் சட்ட விதியின் கீழ் அந்தப் பள்ளி கல்விக்கான கட்டணத் தொகையை அரசே அளிக்கும் என்றும் கூறியது. 

கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாகவும், பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயையும் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால், தாய், தந்தை என இரு பெற்றோர்களையும் இழந்த  குழந்தைகள் 79 நபர்களும், தாய் தந்தையில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 2650 நபர்களும் உள்ளனர். கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைக்கு ரூ.5 லட்சம் ரூபாயும், தாய் தந்தையில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், வைப்பீடு செய்யப்படும் என்றும், இந்தத் தொகை அவர்கள் 18வயது நிறைவடையும் போது வட்டியுடன் தரப்படும் எனவும்,  18 வயது பூர்த்தியாகாமல் தொகை இடையில் எடுக்கப்பட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்,  இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றும்,  குழந்தைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரையிலும் அவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், பெற்றோரர்கள் அரசு துறையில் பணி புரிபவர்களாக இருந்தால் வாரிசுகளுக்கு சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது எனவும் கூறியது. 

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும்  குழந்தைகள் அதே  பள்ளியில் தொடர்ந்து படிக்கலாம் என்றும் கூறியுள்ள தமிழக அரசு, தனியார் பள்ளியாக இருந்தால், கல்வி உரிமைச் சட்ட விதியின் கீழ் அந்தப் பள்ளி கல்விக்கான கட்டணத் தொகையை அரசே அளிக்கும் என்றும் கூறியது. இந்நிலையில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கொரோனா நோய்த் தொற்றால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாகவும், பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு வைப்புத் தொகையாக 5 லட்சம் ரூபாயையும் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ஒருவர் கூறுகையில், பொருளாதார ரீதியில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கிய  முதல்வர் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தந்தையை இழந்து விட்டேன் ஆதரவற்ற இந்த நிலையில் முதல்வரின் இந்த உதவித் தொகை மிகவும் பயனுள்ளதாக அமையும், எனது கல்வி செலவையும் ஏற்றுக் கொள்வதாக முதல்வர் அறிவித்துள்ளார். அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவிப்பதோடு நான் எனது தாயையும் நன்றாக பார்த்துக் கொள்வேன் என உறுதி கூறுகிறேன் என்றார். 
 

click me!