அதிமுக வளர்ச்சியை பார்த்து சசிகலாவுக்கு பொறாமை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

Published : Jun 16, 2021, 01:34 PM ISTUpdated : Jun 16, 2021, 01:35 PM IST
அதிமுக வளர்ச்சியை பார்த்து சசிகலாவுக்கு பொறாமை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!

சுருக்கம்

கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும். அதிமுகவை வளர்ச்சியை பார்த்து சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆடியோ வெளியிடுகிறார். 

திமுக ஆட்சிப் பொறுப்புபேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளி கொலை செய்யப்பட்டிருந்தது எந்த அளவுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுகிறது.  அரசு மருத்துவமனையில் எந்த அளவு மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. 

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. தமிழக அரசின் மெத்தனத்தால் கட்டமானப் தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்புபேற்றதில் இருந்து தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக திகழ்ந்த தமிழகத்தில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது. தடுப்பூசி இல்லை என்று அறிவிப்பு பலகை வைப்பதற்காக ஒரு அரசு செயல்படுகிறது என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும், கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா எப்படி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியும். அதிமுகவை வளர்ச்சியை பார்த்து சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆடியோ வெளியிடுகிறார். அதிமுகவை உடைக்க சசிகலாவின் பிரித்தாலும் சூழ்ச்சி தோல்வியடைந்துவிட்டது. தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கு வெற்றிகரமான தோல்விதான். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே 3 சதவீத வாக்கு வித்தியாசம் தான் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: மீண்டும் தொடங்கும் விஜய் ஆட்டம்.! தளபதியின் தலைமையின் கீழ் மாறும் தமிழக அரசியல்.! திமுக, அதிமுகவை உதறித்தள்ள ரெடியாகும் தோழமைகள்.?!
Next CM: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்..! அதிமுக வாக்குகளை வாரி சுருட்டும் விஜய்..! 1% வாக்கு வித்தியாசத்தில் உச்சானி கொம்பில் திமுக!