பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம்.! அமைதி ஊர்வலம் சென்ற மு.க.ஸ்டாலின்.! அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ்-ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Feb 3, 2023, 10:32 AM IST
Highlights

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அஞ்சரி செலுத்தினர்.

அண்ணா நினைவு நாள்

அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அண்ணாவின் உருவப்படத்திற்கு திமுக, அதிமுக தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திலும் ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியானது இன்று நடைபெற்றது. 

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்

மு.க.ஸ்டாலின் அமைதி பேரணி

அமைதி பேரணியானது வாலாஜா சாலையில் தொடங்கி காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா சதுக்கத்தில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பேரணியின் நிறைவாக அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்!

தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்! (1/2) pic.twitter.com/LBOSlLVRRc

— M.K.Stalin (@mkstalin)

 

 இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்! தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம் என மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

இபிஎஸ் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்து போடுவேன்! கண்டிப்பாக சசிகலாவை சந்திப்பேன்! ஓபிஎஸ் உறுதி.!

ஓபிஎஸ்-இபிஎஸ் அஞ்சலி

இதேபோல அதிமுக இடைக்கால பொதுச்செயாலளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாவின் நினைவுநாளையொட்டி அவரது பசுமை வழிச்சாலை வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட  அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து அண்ணா நினைவிடத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முன்னாள் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக பணப்பட்டுவாடா..? புகார் அளித்த பாஜக..! விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

click me!