குடும்பத் தலைவிகள் வயிற்றில் பால்வார்த்த முதல்வர்.. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி

By Ezhilarasan BabuFirst Published Sep 13, 2021, 12:35 PM IST
Highlights

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். நகைக்கடன்  தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் திமுகவின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதேபோல திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. 

இந்நிலையில் தேர்தல் நேரத்தில் அறிவித்தது போலவே கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதற்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது, அதேபோல அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாலும், அது அனைத்தும் சரி செய்யப்பட்ட பின்னர் நகை கடன் ரத்து தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர்களும் கூறிவந்தனர். இந்நிலையில் நகை கடன் வாங்கிய பலரும் வட்டி கட்டாமல் காத்திருந்தனர். இதனால் கூட்டுறவு வங்கிகளின் நிதிச் சுமை கூடிக்கொண்டே வந்தது.  அதேபோல நகை கடன் தள்ளுபடி என்பது மக்களுக்கு உடனடி நிவாரணம் தரும் விஷயம் என்பதால், அதை தள்ளுபடி செய்வதில் அரசும் உறுதியாக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெற்ற நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறினார். மேலும், உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் கடன்  பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டன, கடந்த ஒரு மாத காலமாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நகை கடன் தள்ளுபடிகாக சுமார் 6000 கோடி துபாய் அரசுக்கு செலவு ஆகும் என மு க ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

 

click me!