
பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனும் அமைச்சர்களுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் நவநீத கிருஷ்ணன் எம்.பியும் பங்கேற்றுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
மேலும் ஜெயலலிதாவின் நினைவு நாள் ஊர்வலம் நடைபெறுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கிரீன்வேல்ஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதாவின் நினைவு நாளில் பேரணி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் டிடிவியின் ஆதரவு எம்.பியான நவநீதகிருஷ்ணன் பங்கேற்றுள்ளார். அவரை தொடர்ந்து டிடிவி தரப்பு எம்.பி விஜில சத்தியானந்த், புதுச்சேரி எம்.பி கோபாலகிருஷ்ணன் வருகை புரிந்துள்ளனர்.
இதனால் முதலமைச்சர் இல்லம் அருகே போலீசார் பாதுகாப்பு சற்று அதிகப்படுத்தப்பட்டுள்ளது.