ஆர்.கே.நகருக்கு ஆயத்தமாகும் டிடிவி - மேலும் மேலும் குவியும் புதிய புகார்கள்..! கதி கலக்கத்தில் சசி கேங்...

First Published Nov 27, 2017, 5:15 PM IST
Highlights
4 people including DTV Thinakaran have been reported to have used the AIADMK flag in Trichy.


திருச்சியில் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தியதாக டிடிவி.தினகரன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் ராஜ்குமார் கண்டோன்மன்ட் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மரணமடைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் எடப்பாடி அணியின் பின்புலத்துடன் டிடிவி.தினகரன் களம் கண்டார். ஆனால், ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. 

மேலும் இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்ததாக கூறி டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கும் சென்றார். 

நீண்ட இழுப்பறிகளுக்கு பிறகு ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதற்கான வேட்பு மனுதாக்கல் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

அதிமுகவினர் இரண்டு அணியாக பிரிந்து தேர்தலை களம் காண உள்ளனர். எடப்பாடி பன்னீர் தரப்பில் ஒரு அணியும் டிடிவி தினகரன் தரப்பில் ஒரு அணியும் தேர்தலை சந்திக்க உள்ளது. 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். ஏற்கனவே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணி என்ற பெயரில் தினகரன் போட்டியிட்டார். 

அதேபோல், இந்த முறையும் தொப்பி சின்னத்திலேயே தினகரன் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. மறுபடியும் தொப்பி சின்னத்தை உரிமை கோருவதற்கு முழு முயற்சியில் இறங்கியுள்ளார். 

வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய டிடிவி தினகரன் ஆயத்தமாகி வருகிறார். 
இந்நிலையில், திருச்சியில் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தியதாக டிடிவி.தினகரன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச்செயலாளர் ராஜ்குமார் கண்டோன்மன்ட் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!