
கதிராமங்கலம் பிரச்சனை மற்றும் ஜி.எஸ்.டியால் தமிழகம் சந்திக்கும் பிரச்சனை ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அதிமுக எம்.பி.க்களை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, கதிராமங்கலம் பிரச்சனை மற்றும் ஜி.எஸ்.டி. பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 12 இடங்களில் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பராமரிப்பு பணிகளுக்காக எண்ணெய் குழாய்களை அந்நிறுவனம் மாற்றி வருகிறது. இதனால் எண்ணைய்க் கசிவு ஏற்பட்டு அந்த பகுதியின் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
அதேபோல், கடந்த 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. இதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அதிமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எம்.பி.க்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நவநீதகிருஷ்ணன் எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கதிராமங்கலம் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக தமிழகம் சந்திக்கும் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எடுத்துக்கூறவும் முதலமைச்சர் கூறியதாக அவர் தெரிவித்தார்.
நீட் வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு நேர்மையாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். மேலும் தமிழக மக்களின் நலன்களுக்கு நாடாளுமன்றத்தில் போராடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக நவநீதகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.