
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து தமிழக முதலமைச்சருடன் அதிமுக எம்.பிக்கள் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
குடியரசு தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜக வேட்பாளராக பீகார் ஆளுநகராக இருந்த ராம்நாத் கோவிந்தும் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் சபாநாயகர் மீராக்குமாரும் போட்டியிடுகின்றனர்.
இதைதொடர்ந்து திமுக காங்கிரஸ் வேட்பாளருக்கும் அதிமுகவின் எடப்பாடி அணி, ஒபிஎஸ் அணி, தினகரன் அணி பாஜக வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தினகரனை கட்சிக்குள் இணைக்காவிட்டால் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தல் குறித்து தமிழக முதலமைச்சருடன் அதிமுக எம்.பிக்கள் தலைமை கழகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.