
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து தமிழக முதலமைச்சருடன் அதிமுக எம்.பிக்கள் தலைமை கழகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, கதிராமங்கலம் பிரச்சனை மற்றும் ஜி.எஸ்.டி. பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று எம்.பி.க்களிடம் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர், தொழில் துறை நிறுவனங்களுடன் நில ஒதுக்கீடு, கதிராமங்கலம், மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் கேள்விகளை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.