Chennai Salem Expressway: சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை.. விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நிதின் கட்காரி..!

By vinoth kumarFirst Published Apr 8, 2022, 7:55 PM IST
Highlights

கடந்த 2018ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்தது. இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. 

சென்னை சேலம் இடையே 277 கிலோ மீட்டர்களுக்கு பசுமைவழிச் சாலைத் திட்டம் அமைக்கும்  பணியை 2024ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

 8 வழிச் சாலை திட்டம்

கடந்த 2018ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் மதிப்பீடு செய்தது. இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இந்த திட்டத்திற்கு 5 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தடை

இந்த திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 5 மாவட்ட விவசாயிகள், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உள்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை, எட்டு வாரங்களில் மீண்டும் உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உச்சநீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி வழங்கிய தீர்ப்பு வழங்கியது. அதில், சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

பட்ஜெட்டில் அறிவிப்பு

8 வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய பட்ஜெட்டில் 8 வழிச்சாலை தொடர்பாக டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

2 ஆண்டுகளில் ரெடி

இதுகுறித்து மாநிலங்களவையில் அமைச்சர் நிதின் கட்காரி கூறுகையில்;- நாடு முழுவதும் ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8,301 கிமீ நீளமுள்ள 22 பசுமை வழிச்சாலை திட்டங்கள் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை- பெங்களூரு மற்றும் சென்னை-சேலம் இடையே 2 பசுமை வழிச்சாலைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை- சேலம் இடையிலான 277 கிமீ நீளமுள்ள பசுமை வழிச்சாலை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால், வரும் 2024ம் ஆண்டிற்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!