அரசு விதிகளை மீறி கட்டிடம் கட்டிய சோழிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ... உடனே இடித்து தள்ள உத்தரவு..!

By vinoth kumarFirst Published Aug 18, 2021, 7:13 PM IST
Highlights

பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் உள்ள சட்டவிரோத கட்டடத்தை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த விஜயபாரதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கு தொடரப்பட்டது. அதில்,  பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலத்தில் தனிநபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக கடந்த ஜூலை 9ம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், 15-வது மண்டல அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார். தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சென்னை மாநகராட்சி தரப்பில் தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், எம்எல்ஏவே சொந்த செலவில் கூட்ட அரங்கை கட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை மறுத்த நீதிபதிகள் அராஜக செயலுக்கான முகாந்திரம் உள்ளது. சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது. அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை இடிக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளனர். 

click me!