சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 153 வார்டுகளில் திமுக, 15 வார்டுகளில் அதிமுக, 13 வார்டுகளில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர்.
சென்னை பெருநகர மாநகராட்சியின் 59வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியைுயம், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. இதில் 153 வார்டுகளில் திமுக, 15 வார்டுகளில் அதிமுக, 13 வார்டுகளில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 122-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், 146-வது வார்டு திமுக கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- TTF Vasan Arrest: வீலிங் செய்து வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய டிடிஎஃப் வாசன்.. ஹாஸ்பிடலில் வைத்தே கைது..!
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் 59வது வார்டு திமுக கவுன்சிலர் சரஸ்வதி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 122, 165, 146, வார்டு கவுன்சிலர்கள் இறந்த நிலையில் மேலும் ஒரு கவுன்சிலர் உயிரிழந்துள்ளார். தற்போது சென்னை மாநகராட்சியில் மொத்தம் 4 வார்டுகள் காலியாக உள்ளன.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று முக்கிய இடங்களில் 5 மணிநேரம் மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?