AIADMK - BJP: அய்யய்யோ.. பாஜக - அதிமுக கூட்டணி உடையல.. வலுவாக உள்ளது.. பதறிய நாராயண திருப்பதி..!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக - பாஜக இடையே மோதல் முட்டல் மோதல் போக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கா? இல்லையா? என்பது குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக - பாஜக இடையே மோதல் முட்டல் மோதல் போக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன கருத்து அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாவைப் பற்றி யார் தவறாக பேசினாலும் நாக்கு துண்டாகும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார். 

Latest Videos

இதையும் படிங்க;- அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இல்லை... அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

அதேபோல் சரித்திரம் தெரியாமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான், இன்றைக்கு புதிது புதிதாக எல்லாம் தலைவர்கள் வந்துள்ளார்கள். அண்ணாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும். எப்போது நீ அரசியலுக்கு வந்தாய்.  அரசியல் பற்றி உனக்கு என்ன தெரியும் அண்ணாமலையை சி.வி.சண்முகம் ஒரு பிடி பிடித்தார். பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாமலை இப்படி பேசலாமா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். 

எதற்கும் அஞ்சாமல் அண்ணாதுரை அவர்களை நான் தவறாக சொல்லவில்லை. சரித்திரத்தில் இருந்ததை எடுத்துக் கூறியிருக்கிறேன். நேர்மையாக அரசியல் செய்பவர்களுக்கு மட்டும்தான் நான் பேசும் அரசியல் புரியும்.  வசூல் செய்து மந்திரிகளாக இருந்தவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. மேலும், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார் என கடுமையான பதிலடியை அண்ணாமலை கொடுத்தார். 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;-  அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும் போது தான் அதை முடிவு செய்ய முடியும். அண்ணாமலையை தேசிய தலைமை தான் இயக்குகிறது. எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப்போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்கு வாங்குவார் என்று விமர்சித்திருந்தார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று ஜெயக்குமார் கூறியது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. 

இதையும் படிங்க;-  அண்ணாமலை பற்றி இழிவாக பேசினால் பதிலடி கொடுப்போம்.! அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு பாஜக பகிரங்க எச்சரிக்கை

இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி  எக்ஸ் தளத்தில்;- அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி குறித்த எனது கருத்தை சில செய்தி தொலைக்காட்சிகள் வேறு அர்த்தத்தோடு பதிவிட்டதற்காக வருந்துகிறேன். கூட்டணி தொடர்பான முடிவுகளை அதிமுக மற்றும் பாஜக தலைமை மட்டுமே தீர்மானிக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

click me!