முதியவர் இறந்ததாக வதந்தியை பரப்பி ஆதாயம் தேடாதீங்க... முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Feb 17, 2020, 12:49 PM IST
Highlights

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி விளக்கமளித்துள்ளார். அதில், சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர்.

வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை தூண்டி விட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தின்போது தடியடி நடத்தப்பட்டது. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி விளக்கமளித்துள்ளார். அதில், சென்னை வண்ணாரப்பேட்டையில் அனுமதியில்லாமல் போராட்டம் நடைபெற்றது. அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர். 

இதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி.. நேரில் பார்த்த கணவர் எடுத்த விபரீத முடிவு

போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் ஒத்துழைக்க மறுத்து காவல்துறையின் வாகனங்களை சேதப்படுத்தினர். போலீசார் மீது காலணி, கற்கள் மற்றும்  தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 82 பேர் கைது கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றிய போதும் ரகளையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- இஸ்லாமியர்களை தூண்டுவிட்டு தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த திமுக முயற்சி... பகீர் கிளப்பும் இல.கணேசன்..!

மேலும், சில விஷமிகள் போராட்டத்தை தூண்டிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. வண்ணாரப்பேட்டை போராட்டத்தின்போது தடியடி நடத்தியதில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி, மாநிலம் முழுவதும் பேராட்டத்தை தூண்டி விட்டுள்ளனர். ஆனால், அந்த முதியவர் இயற்கையாகவே மரணமடைந்நதார் என முதல்வர் விளக்கமளித்துள்ளார். முதல்வரின் பதிலை ஏற்க மறுத்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்தனர். 

click me!